திருச்சியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை!


நவ.30,

தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் எதிர்வரும் டிச.31 வரை முன்னெடுக்கப்பட உள்ளது.

அதனடிப்படையில் திருச்சியில் தொடர்ந்து மஜக-வில் வியாபாரிகள், ஓட்டுநர்கள், இளைஞர்கள் என பலதரப்பினரும் இணைந்து வருகின்றனர்.

திருச்சியில் நேற்று நாகமங்கலம், பஞ்சப்பூர் மற்றும் துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களை தன்னெழுச்சியாக மஜக வில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பேரா. மைதீன் அப்துல் காதர் முன்னிலையில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் அந்தோணிராஜ், சையது முஸ்தபா, அப்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#திருச்சி_மாவட்டம்.