பிப்.03.,
மத்திய அரசின் பாரபட்ச குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கோவையில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் இரண்டாம் கட்டமாக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜாஉசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது Mcom. இந்திய யூனியன் முஸ்லீக் சார்பில் அபுபக்கர் MLA, திமுக சார்பில் கார்த்திக் MLA, காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன், மமக பொருளாளர் உம்மர், உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உக்கடம் முதல் அவிநாசி சாலை வரை நடைப்பெற்ற இப்பேரணியில் பெண்கள், குழந்தைகள், உள்பட ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடிகளுடன் கலந்து கொண்டனர்
மேலும் 670அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி சென்றது அங்கு கூடிய பொதுமக்களுக்கு உற்சாக மூட்டியது நான்கு கிலோ மீட்டர் வரை தொடர்ந்த இப்பேரணி அமைதியான முறையில் சென்று அவிநாசி சாலையில் கண்டன கோஷங்களுடன் நிறைவு செய்யப்பட்டது.
இதில் மஜக சார்பில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை TA.நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், முஸ்தபா, மற்றும் திரளான மஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்