அறந்தாங்கி. ஜூலை.01., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி அவர்கள் (01-07-18) ஞாயிறு அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகைதந்தார்கள். அப்போது #புதுக்கோட்டை_கிழக்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகிலுள்ள #கொழுவனூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் #டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி கொழுவனூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதில் கடந்த மாதம் மஜக உள்பட பல்வேறு கட்சியினர் இணைந்து அந்த மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தியது, மற்றும் டாஸ்மாக் கடையால் பகுதி பெண்கள் மற்றும் முதியவர்கள் சந்தித்து வரும் இன்னல்களை கிராம பெண்கள் கண்ணீர் மல்க கூறினர், மக்களுடைய கருத்துகளை கேட்டு மனுவை பெற்றுக்கொண்டார். அப்போது, மேல் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பத்திரிக்கையாளர்கள் முன்பு உறுதியளித்தார். #மஜக மாவட்ட துணைச் செயலாளர் சைய்யது அபுதாஹிர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில். மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ் ஆகிய மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், இதில்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பாகம் - 06) பேரவை தலைவர் அவர்களே… பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருப்பது போல தமிழகத்திலும் "பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். பத்திரிக்கைத்துறையை சேர்ந்த அனைத்து பிரிவினரும் பயனடையும் வகையில் "பத்திரிக்கையாளர் நல வாரியம்" ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு முன்பாக காலையில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்கள், 110 விதியின் கீழ், பத்திரிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அப்போது #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் எழுந்து, நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற வகையில், முதல்வரின் அறிவிப்புகளை வரவேற்பதாக கூறினார். அவை முடிந்து வெளியே வந்ததும், தலைமை செயலக பத்திரிக்கையாளர்கள், தங்கள் கோரிக்கைகளை இரண்டாவது முறையாக அவையில் எழுப்பியதற்க்கு நன்றி கூறினர். பிறகு, பல்வேறு பத்திரிக்கை சங்கங்களின் நிர்வாகிகள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு
தலித் மாணவர்களுக்கான உதவித்தொகையை குறைக்ககூடாது! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுக்கோள்!
(பகுதி - 04) பேரவை தலைவர் அவர்களே… உயர்கல்வி படிக்கும் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை குறைக்கும் வகையில் தமிழக அரசாணை எண் 51 மற்றும் 52 ஐ வெளியிட்டுள்ளதாக அறிகிறேன். இதனால் பல கோடிகள் SC/ST மாணவர்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட நலத்துறை அமைச்சகம், இதன் உண்மை தன்மை, பிண்ணணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். பின்தங்கிய நிலையில் இருக்கும், அந்த சமூகத்தை அறிவாசான் அம்பேத்கர் வழியில் முன்னேற்ற உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தை பேசுவதர்க்கு முன்பாக அயோத்திதாசர் பண்டிதரின் பெயரால் விருது வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி கூறினார். அவர்தான் "ஒரு பைசா தமிழன்" என்ற பத்திரிக்கையை தொடங்கி தமிழ் இதழியல் துறைக்கு மறுமலர்ச்சி ஊட்டியவர் என்றும் புகழாரம் சூட்டினார். இதற்கு தலித் சமூக MLAக்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்..! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி 4) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரசாயணமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தந்ததற்கும், பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்து, ஊக்குவிக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு, "பாரத ரத்னா டாக்டர் MGR பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது" வழங்கப்படும் என அறிவித்ததற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான #காவிரி_டெல்டா மாவட்டங்களை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ' உடனடியாக அறிவிக்க தமிழக முதல்வர் அவர்கள் துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் காவிரி சமவெளி பாதுகாக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இக்கோரிக்கை நீண்ட காலமாக விவசாய சங்கங்களாலும், டெல்டா மாவட்ட மக்களாலும் வலுயுறுத்தப்பட்ட ஒரு கோரிக்கை என்பதும், இதை வலியுறுத்தி இரண்டாவது முறையாக பேசும் #ஒரே_சட்டமன்ற_உறுப்பினர் இவர்தான் என்பது கூறிப்பிடத்தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வேண்டும்..! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்..!!
சென்னை.ஜூன்.30., கடந்த (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி : 03) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... NEET தேர்வு என்பது பின் தங்கிய சமூகங்களுக்கும், கிராமப்புற மாணவ, மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது என்பதாலயே இந்த அவையில் உள்ள அனைவரும் ஒரே குரலில் எதிர்க்கிறோம். தற்போது, இதில் அரசுப் பள்ளிகளில் பயின்று NEET தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வசதி ஏற்படுத்தும் வகையில் 3% சதவித உள் இட ஒதுக்கீட்டை, அதில் வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட முயற்சி எடுக்க வேண்டும். இது மஹராஷ்டிரா, ஆந்திராவில் நடைமுறையில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் J. P நட்டா அவர்கள், 15-04-2018 அன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது, இதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று கூறியதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.