டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLAவிடம் கிராம மக்கள் மனு…!

அறந்தாங்கி. ஜூலை.01., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி அவர்கள் (01-07-18) ஞாயிறு அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகைதந்தார்கள்.

அப்போது #புதுக்கோட்டை_கிழக்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகிலுள்ள #கொழுவனூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் #டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி கொழுவனூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதில் கடந்த மாதம் மஜக உள்பட பல்வேறு கட்சியினர் இணைந்து அந்த மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தியது, மற்றும் டாஸ்மாக் கடையால் பகுதி பெண்கள் மற்றும் முதியவர்கள் சந்தித்து வரும் இன்னல்களை கிராம பெண்கள் கண்ணீர் மல்க கூறினர், மக்களுடைய கருத்துகளை கேட்டு மனுவை பெற்றுக்கொண்டார்.

அப்போது, மேல் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பத்திரிக்கையாளர்கள் முன்பு உறுதியளித்தார்.

#மஜக மாவட்ட துணைச் செயலாளர் சைய்யது அபுதாஹிர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில்.

மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ் ஆகிய மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும், இதில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் மாவட்ட செயலாளர் ஷாஜிதீன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் மைதீன், கோட்டைப்பட்டினம் நகர செயலாளர் ராஜ் முகம்மது மற்றும், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுகை_கிழக்கு_மாவட்டம்