திருப்பூர்.ஜுலை.25., திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க #மனிதநேய_ஜனநாயக _கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் இன்று வருகை தந்தார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது கூறியதாது …
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரியை 50 முதல் 100 சதவீதம் உயர்த்தியிருப்பதை மஜக கண்டிக்கிறது.
இதனால் சாமான்ய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள், எனவே தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
OPS அவர்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் போனது குறித்தும் அவரும், அதிமுக தலைமையும்தான் கவலைப்பட வேண்டும் .
இப்படி ஒரேயடியாக அடி பணிந்து போவதை தமிழக மக்கள் விரும்பவில்லை, ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டுருக்காது என அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எல்லா நிலையிலும் தோல்வியடைந்திருக்கிறது. GST விவகாரத்தில் நாடெங்கிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது,
உலகமெங்கும் GSTக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கிறார்கள், தற்போது மலேசியாசியாவில் GST முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது,
இந்தியாவில் மொத்த GSTவரியையும் 10 சதவிதத்திற்குள் கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும்.
திருப்பூரில் GST காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,
முதலீட்டாளர்கள் பங்களாதேஷ் நாட்டை நோக்கி ஓடுகிறார்கள், பின்னலாடை தொழிலுக்கான GST-யை 5% க்குள் கொண்டு வந்தால்தான் இத்தொழிலை பாதுகாக்க முடியும்.
இந்நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
மக்கள் விரோத பாஜக அரசை அகற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும், சில மாநிலங்களில் மூன்றாவது அணி தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன்,
நாடு தழுவிய அளவிற்கு ஒரு மூன்றாவது அணி என்பது, பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.
தற்போது வி.பி.சிங் போன்ற ஒரு தலைவருக்காக நாடு ஏங்கிக் கொண்டிருக்கிறது.
தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பு மஜகவின் அரசியல் நிலைபாடு என்ன? என்பது பற்றி அறிவிப்போம்.
இவ்வாறு பேட்டியளித்தார்.
இப் பேட்டியின் போது மாநில துணைச்செயலாளர் TK.அப்துல் பசீர்,
மாநில கொள்கை விளக்க அணி சாந்து முகம்மது, மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணைச்செயலாளர்கள் லியாகத் அலி, அக்பர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட தொழிற்சங்க அணிச்செயலாளர் சாகுல், தகவல் தொழில்நுட்ப அணியை சார்ந்த காதர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
25-07-2018