பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!

சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம்.

(பாகம் – 06)

பேரவை தலைவர் அவர்களே…

பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருப்பது போல தமிழகத்திலும் “பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

பத்திரிக்கைத்துறையை சேர்ந்த அனைத்து பிரிவினரும் பயனடையும் வகையில் “பத்திரிக்கையாளர் நல வாரியம்” ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு முன்பாக காலையில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்கள், 110 விதியின் கீழ், பத்திரிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அப்போது #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் எழுந்து, நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற வகையில், முதல்வரின் அறிவிப்புகளை வரவேற்பதாக கூறினார்.

அவை முடிந்து வெளியே வந்ததும், தலைமை செயலக பத்திரிக்கையாளர்கள், தங்கள் கோரிக்கைகளை இரண்டாவது முறையாக அவையில் எழுப்பியதற்க்கு நன்றி கூறினர்.

பிறகு, பல்வேறு பத்திரிக்கை சங்கங்களின் நிர்வாகிகள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி கூறினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்