You are here

கர்நாடகா மீது உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புதுக்கோட்டையில் பேட்டி..!!

புதுகை. ஜூலை.02., புதுக்கோட்டை மேற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் துரை அவர்களின் தாயார் மரணமடந்ததையொட்டி மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அவரது இல்லத்திற்க்கு சென்று ஆறுதல் கூறினார்.

பிறகு, புதுக்கோட்டையின் பிரபல சமூக சேவகர் கரீம் ஹாஜியார் இல்லத்திற்கு சென்று அவரையும் உடல் நலம் விசாரித்தார்.

பிறகு, நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், கர்நாடகாவில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவை கண்டித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுமாயின் அதன் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பஜக தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், தமிழிசை சொல்கிறார் என்பதற்காக இக்கருத்தை நிராகரிக்க கூடாது. அதனை வரவேற்கிறோம். அதுபோல் இந்தியா முழுக்க அதானியும், அம்பானியும் தான் இத்துறையில் கொழிக்கிறார்கள். எனவே, இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றார்.

பேட்டியின் போது மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் துரை, துணைச் செயலாளர் ஜான், கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக், மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒளி முகம்மது, MJVS மாவட்ட செயலாளர் முஜி, அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுகை_மேற்கு_மாவட்டம்

Top