தலித் மாணவர்களுக்கான உதவித்தொகையை குறைக்ககூடாது! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுக்கோள்!

(பகுதி – 04)

பேரவை தலைவர் அவர்களே…

உயர்கல்வி படிக்கும் தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை குறைக்கும் வகையில் தமிழக அரசாணை எண் 51 மற்றும் 52 ஐ வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்.

இதனால் பல கோடிகள் SC/ST மாணவர்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிட நலத்துறை அமைச்சகம், இதன் உண்மை தன்மை, பிண்ணணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.

பின்தங்கிய நிலையில் இருக்கும், அந்த சமூகத்தை அறிவாசான் அம்பேத்கர் வழியில் முன்னேற்ற உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தை பேசுவதர்க்கு முன்பாக அயோத்திதாசர் பண்டிதரின் பெயரால் விருது வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி கூறினார். அவர்தான் “ஒரு பைசா தமிழன்” என்ற பத்திரிக்கையை தொடங்கி தமிழ் இதழியல் துறைக்கு மறுமலர்ச்சி ஊட்டியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

இதற்கு தலித் சமூக MLAக்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.