சென்னை.ஜுன்.03., சென்னை பனையூரில் உள்ள கவிக்கோ அவர்களின் இல்லத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்கள். மறைந்த கவிக்கோ மகள் வழி பேரன் டாக்டர் நசிர் அவர்களிடம் அவரது கடைசி நிமிடங்கள் பற்றி கேட்டறிந்தார்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பிறகு அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில், சிந்தனை என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த பேரறிஞர் என்றும் காந்த வரிகளாலும், கந்தக சொற்களாலும் தமிழ் இலக்கிய உலகை வழிநடத்தியவர் என்றும், உலகின் சன்னலை தமிழ் இலக்கிய உலகிற்கு திறந்து காட்டியவர் என்றும் புகழாரம் சூட்டி இரங்கலை பதிவு செய்தார். அவருடன் மாநில விவசாய அணி செயலாளர் முபாரக், நாகை தெற்கு மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, சகோ.ஜெய்னுதீன் ஆகியோர் உடன் இருந்தார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING சென்னை. 02.06.2017.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
கலைஞரின் பணிகளை மனதார பாராட்டுகிறோம்…
மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அறிக்கை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான திரு. கலைஞர் அவர்களின் சட்டப்பேரவை வைர விழா நிகழ்ச்சி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கலை, இலக்கியம், தமிழ்த் தொண்டு, சமுதாயப்பணிகள், இவற்றோடு அரசியலை முன்னிறுத்தி அவர் ஆற்றிய சேவைகள் பிரமிப்பானவை. சட்டப்பேரவையில் அவர் எடுத்து வைத்த வாதங்கள் கூர்மையான ஆயுதங்களாக பாய்ந்தன. அபாரமான நினைவாற்றல் அவரது ஆளுமையை அலங்கரித்தது. நகைச்சுவை ததும்ப அவர் எடுத்துரைத்த கருத்துக்களும், புள்ளி விபரங்களும் நாட்டு மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் திரு. கலைஞர் அவர்களின் சட்டப்பேரவை செயல்பாடுகள் வரலாற்றின் பக்கங்களின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. மிக மிக எளிய குடும்பத்து பின்னனியில் இருந்து உருவாகி, சீர்திருத்த பாதையில் பயணித்து, தமிழக அரசியலையும் தாண்டி தேசிய அரசியலையும் தீர்மானித்த அவரது அறிவும் ஆளுமையும் பலருக்கும் அரசியல் பாடமாக இருக்கிறது. மனிநேய ஜனநாயக கட்சி அரசியல் ரீதியாக மாற்று முகாமில் பணியாற்றினாலும் , திரு.கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையைக் கொண்டிருக்கிறது. அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு தொண்டாற்ற
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது…
நாகை. ஜூன்.02., இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜவுளி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் திரு.O.S.மணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் K.கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி, மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 02.06.2017
நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரி கவிக்கோ !
(மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் இரங்கல் அறிக்கை) பேராசியராகவும், பேரறிஞராகவும், கவிக்கோ எனும் புகழ் வார்த்தையாலும் கொண்டாடப்பட்ட கவிஞர் அப்துர் ரஹ்மான் இன்று விடியற்காலை நம்மை பிரிந்து இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். (இன்னாலில்லாஹி) அவர் தமிழ் இலக்கியத்தின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர். தமிழ் கவிஞர்களுக்கு எல்லாம் தாயாக வாழ்ந்தவர். மதுரையில் பிறந்து, வாணியம்பாடியில் வேர்விட்டு, உலகமெங்கும் தன் கவிதைகளால் புகழ் ஈட்டியவர். திராவிட இயக்கப் பற்றாளராகவும், இந்தி திணிப்புக்கு எதிரான போராளியாகவும், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாளராகவும் செயல்பட்டவர். அவரது இலக்கிய உலகம் வித்தியாசமானது. அறிவியல், ஆன்மிகம், வரலாறு, தத்துவம், ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. ஆலாபனை, பால் வீதி, போன்ற அவரது கவிதை தொகுப்புகள் தமிழ் உலகிற்கு முற்றிலும் புதிதானவை. அவர் ஆழ்கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்தார் என்றால் அது மிகையாகாது. கஜல் , ஹைகூ போன்ற கவிதை வடிவங்களை இவர்தான் தமிழில் பிரபலப்படுத்தினார். விருதுகளுக்காகவே எழுதுபவர்கள், விருதுகளை தேடிச் செல்பவர்கள் நிறைந்த இலக்கிய உலகில் இவர் தனித்தன்மை மிக்க கொள்கைவாதியாக இயங்கினார். அவரது உரைநடைகளும் புதுக்கவிதை பூக்களோடு அலங்கரிக்கப்பட்டிருக்கும். படிக்க, படிக்க மணக்கும். அவரது விமர்சனங்கள் நேர்மையாகவும், கூர்மையாகவும் இருக்கும்.
நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!
இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அவர்களையும் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் அவர்களையும் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். பின்பு அவரது அலுவலகத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார். உடன் மஜக மாநில விவசாய அணி செயலாளர் செய்யது முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முஹம்மது சுல்தான், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது , நகர துனை செயலாளர்கள் அப்துல் மஜீது, முஹம்மது ஜாசிம் உடனிருந்தனர். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 02.06.2017