#நாகை_தொகுதி_MLA_குறித்த_பத்திரிக்கை_செய்திகள்_தொகுப்பு_நூல்_வெளியீடு..! நாகை. ஜூலை.23., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் தொகுதி மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பொதுவாழ்வில் செயலாற்றிய சீர்மிகு பணிகள் குறித்து, கடந்த 20.05.2016 முதல் 30.06 2018 வரை இரண்டு ஆண்டுகள் வெளிவந்த பத்திரிக்கை செய்தி தாள்களின் தொகுப்பு நூலினை மஜக நாகை தெற்கு மாவட்ட செயலாளர் வடகரை M. பரகத் அலி அவர்கள் வெளியிட, அதனை பொதுச்செயலாளர் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் மஜக மாவட்ட பொருளாளர் திருப்பூண்டி சாகுல், மாவட்ட துணை செயலாளர் பொரவச்சேரி ஜாகீர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுல்தான், மாவட்ட மருத்துவ சேவை அணிச்செயலாளர் செய்யது முபாரக், மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மனித உரிமை அணி செயலாளர் தெத்தி ஆரிப், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தம்ஜூதீன் மற்றும் அலுவலக செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். தொகுதி மக்களின் பார்வைக்காக இந்த தொகுப்பு நூல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை வடிவமைத்த அலுவலக செயலாளர் சம்பத்குமார் அவர்களை, சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பாராட்டினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
நாகப்பட்டிணம்
நாகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்..! நாகை MLA பங்கேற்ப்பு..!!
நாகை. ஜூலை.12., இன்று நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கோபால், மயிலாடுதுறைநாடாளுமன்ற உறுப்பினர் திரு. பாரதி மோகன், நாகை ட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் V.ராதாகிருஷ்ணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் அமுல் படுத்தியது குறித்து ஆய்வுகள் மேற்க் கொள்ளப்பட்டன. தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 12.07.2018
நாகைக்கு மருத்துவ கல்லூரி தேவை! நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், எழுப்பிய தொகுதி கோரிக்கைகள்…!!
(பாகம் - 10 ) தனி தாலுக்கா எனது தொகுதியிலுள்ள "திருமருகலை" தனி தாலூகாவாக அறிவிக்க வேண்டும். இது எனது தொகுதியின் 30 ஆண்டுக்கால கோரிக்கையாகும். மீனவர்கள் படகுகள் நாகப்பட்டினம் மீனவர்களின் படகுகள், இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மத்திய அரசு மூலம் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். கடற்கரை மேம்பாடு நாகை - நாகூர் கடற்கரைப் பகுதிகளை சுற்றுலாத் துறைமூலம் மேம்படுத்தித் தர வேண்டும். சுற்றுச் சூழல் புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் உள்ள மேல வாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்தில் நிலக்கரி, இறக்குமதி செய்யப்படுவதால் தூசுகள் கிளம்பி சுற்றுச் சூழல் மாசு அடைகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதைப்பற்றி நான் ஏற்கனவே இந்த அவையில் பேசிருக்கின்றேன். தமிழக அரசு சுற்றுச் சூழல் அமைச்சகம் மூலம் இந்நிறுவனத்தினிடம் கலெக்டர் வழியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். சிக்கல் கோயில் சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இந்து சமய அறநிலைத் துறை சார்பில் தங்கும் விடுதி ஒன்றை கட்டித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பசுமை வழி சாலை நாகப்பட்டினம் - சென்னை இடையே விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் 8
தமிழ் அறிஞர்கள் பெயரால் விருதுகள் வழங்கப்பட வேண்டும்…! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூலை.03., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி - 08) பேரவை துணை தலைவர் அவர்களே.. அயோத்திதாசர் பண்டிதரின் பெயரில் அவரது இலட்சிய நோக்கோடு ஒருவருக்கு அவரது பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவித்திருப்பதற்கு எனது பாராட்டுகளை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்தான் 'ஒரு பைசா தமிழன்' பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறேன். எனது தொகுதியான நாகப்பட்டினத்தில் தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலை அடிகளார் பெயரில் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு விருது வழங்கப்படும் என அறிவித்தற்காகவும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிறந்த நாளான ஜூலை-15 அன்று அவருக்குரிய மரியாதை செய்யப்படும் என அறிவித்தற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனித்தமிழ் நூற்றாண்டு விழா கொண்டாடபடாமலேயே முடிந்திருக்கிறது. இதை சிறப்பிக்கும் வகையில் அவர் பிறந்த நாகப்பட்டினத்தில் தனித்தமிழ் ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவவேண்டும் என்றும் நாகப்பட்டினத்தில் உள்ள "பப்ளிக் ஆபீஸ் ரோடை"
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்..! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி 4) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரசாயணமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தந்ததற்கும், பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்து, ஊக்குவிக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு, "பாரத ரத்னா டாக்டர் MGR பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது" வழங்கப்படும் என அறிவித்ததற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான #காவிரி_டெல்டா மாவட்டங்களை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ' உடனடியாக அறிவிக்க தமிழக முதல்வர் அவர்கள் துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் காவிரி சமவெளி பாதுகாக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இக்கோரிக்கை நீண்ட காலமாக விவசாய சங்கங்களாலும், டெல்டா மாவட்ட மக்களாலும் வலுயுறுத்தப்பட்ட ஒரு கோரிக்கை என்பதும், இதை வலியுறுத்தி இரண்டாவது முறையாக பேசும் #ஒரே_சட்டமன்ற_உறுப்பினர் இவர்தான் என்பது கூறிப்பிடத்தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.