தமிழ் அறிஞர்கள் பெயரால் விருதுகள் வழங்கப்பட வேண்டும்…! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!

சென்னை.ஜூலை.03., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம்.

(பகுதி – 08)

பேரவை துணை தலைவர் அவர்களே..

அயோத்திதாசர் பண்டிதரின் பெயரில் அவரது இலட்சிய நோக்கோடு ஒருவருக்கு அவரது பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவித்திருப்பதற்கு எனது பாராட்டுகளை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்தான் ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.

எனது தொகுதியான நாகப்பட்டினத்தில் தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலை அடிகளார் பெயரில் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு விருது வழங்கப்படும் என அறிவித்தற்காகவும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது பிறந்த நாளான ஜூலை-15 அன்று அவருக்குரிய மரியாதை செய்யப்படும் என அறிவித்தற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனித்தமிழ் நூற்றாண்டு விழா கொண்டாடபடாமலேயே முடிந்திருக்கிறது. இதை சிறப்பிக்கும் வகையில் அவர் பிறந்த நாகப்பட்டினத்தில் தனித்தமிழ் ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவவேண்டும் என்றும் நாகப்பட்டினத்தில் உள்ள “பப்ளிக் ஆபீஸ் ரோடை” மறைமலை அடிகள் சாலை என பெயர் மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கவிஞர் இன்குலாப் அவர்கள் எனது பேராசிரியர் ஆவார். அவர் சிறந்த இலக்கியவாதி. மணவை முஸ்தபா அவர்கள் 16 ஆயிரம் அறிவியல் தமிழ் சொற்களை தமிழ் உலகுக்கு தந்தவர் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

மேலும் கவிஞர்.நா. காமராசன், கவிஞர் இன்குலாப், கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழறிஞர் மணவை முஸ்தபா ஆகியோர் பெயர்களில் விருதுகள் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.