சென்னை.ஜூலை.02., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம்.
(பகுதி – 07)
பேரவை தலைவர் அவர்களே…
எனது நாகப்பட்டினம் தொகுதியில் நாகை – நாகூருக்கு அருகில் எல்லா சமூக மாணவிகளும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வக்பு வாரியத்தால் “அன்னை ஆயிஷா பெயரில் மகளிர் கலை – அறிவியல் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன்.
மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸா – இ – ஆசம் பள்ளிக்கூடம், ராயப்பேட்டை ஹேபோர்டு மகளிர் அரசு பள்ளிக்கூடம், திருவல்லிக்கேணி தயார் சாஹிப் அரசு முஸ்லிம் பள்ளிக்கூடம் ஆகிய நிறுவனங்களையும், அதன் சொத்துக்களையும் முஸ்லிம் சமுதாயம் உருவாக்கி அதை ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்கு ஒப்படைத்தது. இன்று அங்கே பல நிர்வாக குழப்பங்கள் நடக்கிறது.
இந்த மூன்றையும் தமிழக அரசு இவற்றை தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் ஒப்படைத்து, அதன் கீழ் நிர்வாகக் குழுவை அமைத்து வழி நடத்த வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
அண்ணா சாலையில் உள்ள மதரஸா – இ – ஆசம் வளாகm 1500கோடி மதிப்புடையது, அதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக ஒரு பெண்கள் பொறியியல் கல்லூரியை தொடங்க அரசு உதவ வேண்டும் என்றும், இவற்றையெல்லாம் செயல்படுத்த தமிழக வக்பு வாரியத்திற்கு 10 கோடியை சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தற்போது 2கோடியாக இருக்க கூடிய மானிய உதவி 10கோடியாக உயரும் போது வக்பு வாரியத்தின் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் தீர்க்கப்படும் என்பதும், சென்னையிலும், நாகூரிலும் மேற்குறிப்பிட்ட கல்லூரிகள் அமைவது எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.