கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்க ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவதில் மாவட்ட அரசு நிர்வாகம் பாரபட்சம் களமிறங்கிய மதுரை வடக்கு மாவட்ட மஜகவினர்!

மதுரை.ஆக.28., மதுரை வடக்கு மாவட்டம் கொடிக்குளம் பஞ்சாயத்து ஐயப்பன் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க அரசு நிர்வாகம் முடிவு செய்து அந்த பகுதியில் கால்வாய் அமைத்து வருகிறது,

இதன் தொடர்ச்சியாக ஐயப்பன் நகர் பகுதியிலும் அந்த வடிகால் அமைக்கும்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாக சில வீடுகளை இடிக்க முடிவு செய்தனர் சில வீடுகளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள்
ஐயப்பன் நகர் மஜக நிர்வாகி ராஜேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர் உடனடியாக வடக்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மேற்கண்ட தகவலை தெரிவிக்கவும்,

உடனடியாக களமிறங்கிய மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக். மாவட்ட பொருளாளர் சுலைமான்.மாவட்டதுணைச்செயலாளர் சசிக்குமார். மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவிராஜ் மற்றும் ஐய்யப்பன் நகர் மஜவினர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

அவர்கள் Pdo அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தவும்,

உடனடியாக எழுத்துப்பூர்வ மனுவோடு bdo அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஐயப்பன் நகர் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நடக்கிறது,

சில வீடுகளில் மட்டும் இடிப்பதில் ஆர்வமாக அதிகாரிகள் உள்ளனர் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறவும் அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்வதாக அனுப்பிவைத்தனர்.

மீண்டும் ஐயப்பன் நகர் பகுதிக்கு வந்தபோது ஆக்கிரமிப்பை அகற்றும் என குறிப்பிட்ட வீடுகளை மட்டும் இடிக்க அரசு ஊழியர்கள் வந்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்களையும் குடியிருப்புவாசிகளையும் அணிதிரட்டி பாரபட்சம் காட்டும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு வந்த காவல் துறை அதிகாரிகளும் pdo அதிகாரிகளும் இந்த பணியை தொடர வேண்டாம் என நிறுத்தி அங்கு திரண்ட மக்களிடம் சர்வேயர் வந்து அளவு எடுத்த பின்பு பாரபட்சமற்ற முறையில் மீண்டும் இதன் பணிகளை தொடருவோம் என வாக்குறுதி அளித்து கலைந்து சென்றனர் .

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#மதுரை_வடக்கு_மாவட்டம்
28-8-2018