மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் நாகை MLA சந்திப்பு..!

சென்னை.ஆக.28., சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து தனது தொகுதி மீனவ மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டார்.

முக்கியமாக நம்பியார் நகரில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அப்பகுதி மீனவர்கள் செலுத்துவதாகவும், இது தொடர்பாக மாவட்ட அமைச்சர் அண்ணன் O.S.மணியன் அவர்களிடமும், தன்னிடமும் மீனவ கிராம பஞ்சாயத்தினர் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

அது போல் நேற்று நாகை – நாகூர் சாலைகள் மேம்பாடு, திருமருகல் ஒன்றியம் மற்றும் நாகை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

பிறகு சுற்றுலா துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் அவர்களையும் சந்தித்து நாகை மற்றும் நாகூர் கடற்கைரையை மத்திய அரசின் கடலோர மேம்பாட்டு திட்டங்களை பயன்படுத்தி சுற்றுலா துறை மூலம் அழகுப்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டு, திட்ட மதிப்பீடுகளையும் கையளித்தார்.

மூன்று துறை அமைச்சர்களும் நாகை தொகுதிக்கான இக்கோரிக்கைகளை செயல்படுத்தி தருவதாக தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் வாக்களித்துள்ளனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
28.08.18