மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் நிவாரண நிதி ஒப்படைப்பு..!

புதுக்கோட்டை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் வசூல் செய்யப்பட்ட கேரள வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி அறந்தாங்கி அம்மா உணவகம் அருகில் மாவட்ட செயலாளர் கோல்டன், இ. முபாரக் அலி தலைமையில் இன்று (28-08-18 செவ்வாய்) மாலை 5 மணிக்கு நடைபெற்றது,

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர்
அரசை, எம்.பி, சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர்கள்
பி. அஜ்மீர் அலி, எஸ். ஒளி முகம்மது மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க (MJTS) மாவட்ட செயலாளர் கோட்டை, டி.ஷாஜிதீன் அனைவரையும் வரவேற்றார்.

மஜகவினர் பொதுமக்களிடம் வசூல் செய்த ரூபாய் 75.000 (எழுபத்தி ஐந்தாயிரம்) நிதியை அறந்தாங்கி வார்த்தக சங்க தலைவர் ABC. வரதராஜன் ஒப்படைக்க மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர், ராவுத்தர்ஷா பெற்றுக்கொண்டார்.

பொதுமக்களிடமிருந்து சேகரித்த 1.00.000 ஐம்பதாயிரம் மதிப்பிலான பொருட்களை அறந்தாங்கி ரோட்டரி சங்கத்தின் மூத்த நிர்வாகி கரேத்தே கண்ணையன் ஒப்படைக்க மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் கோட்டை, ஏ.எம். ஹாரிஸ் பெற்றுக்கொண்டார்.

ஆகமொத்தம் 1.75.000 நிவாரணம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமைக்கு அனுப்பப்பட்டது.

அறந்தாங்கி வர்த்தக சங்க செயலாளர் வி ஜி செந்தில், பொருளாளர் சலிம், அறந்தாங்கி ரோட்டாரி சங்கத்தின் தலைவர் அபுதாலீப், செயலாளர் பார்த்திபன்,

மஜக மாவட்ட நிர்வாகிகள் மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், இளைஞர் அணிச் செயலாளர் அஹமது ரியாஸ். மீனவர் அணிச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நகர நிர்வாகிகள் செயலாளர் ஜகுபர் சாதிக், பொருளாளர் அப்துல் கரீம், துணைச் செயலாளர் அபுதாஹிர், ஒன்றிய நிர்வாகிகள் செயலாளர் அப்துல் ரஜாக். பொருளாளர் முகம்மது குஞ்சாலி, துணைச் செயலாளர் நாகூர் கனி ஆகியோர் கலந்துக்கொண்டனர்

இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் நகரி, எம்.சைய்யது அபுதாஹிர் நன்றி கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்