தூத்துக்குடி.மே.30., இன்று #தூத்துக்குடியில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைப் பெறும் பொதுமக்களை, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
1/2 மணி நேரத்திற்கு முன்பு, #ரஜினிகாந்த் வந்து சென்றார். அப்போது அவர்களை பார்த்தப் பிறகு, போராட்டக்காரர்களை #சமூக_விரோதிகள் என கொச்சைப்படுத்தியது TV களில் பரப்பரப்பாக ஓடிக் கொண்டிருந்தது.
இதனால் மருத்துவமனையே கொந்தளிப்பாக இருந்தது. அப்போது #மஜக வினருடன், தமிமுன் அன்சாரி MLA மருத்துவமனைக்கு வந்ததும், அவர்கள் மிகுந்த அன்போடும், நம்பிக்கையோடும் வரவேற்றனர்.
பலரும் தலைக்காயத்திற்கு ஆளானதை பார்க்க முடிந்தது. #துப்பாக்கி குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் உடல்நிலை தேறி வருவதையும் பார்க்க முடிந்தது.
எல்லோரும் கண்ணீர் மல்க போலீஸாரின் அராஜகத்தை சுட்டிக் காட்டினர். 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி அங்கு பெரிய கட்டோடு உட்கார்ந்திருந்தார்.
அவரை விசாரித்தப்போது, போலீஸார் அவரது கையைப் பிடித்து முறுக்கி உடைத்ததாக கூறி தழுதழுத்தார். இப்படி ஒவ்வொருவரின் கண்ணீரும், துயரமும் அனைவரையும் உருக்கியது.
நேற்று பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்றத்தில் தூத்துக்குடி மக்களுக்காக பேசியதை தொலைக்காட்சிகளில் பார்த்ததாகவும், எங்களுக்கு குறல் கொடுத்ததற்காக நன்றி என்றும், உங்களை போன்ற தலைவர்களை நம்புகிறோம் என்றும் அம்மக்கள் கூறினார்கள். ரஜினிகாந்த் எதற்கு எங்களை பார்க்க வர வேண்டும்? என்றும் பொங்கினர். ரஜீனிகாந்த் எங்களை எப்படி சமூக விரோதிகள் என்று கூறலாம் என வெடித்தனர்.
மக்களை அமைத்திப்படுத்திய தமிமுன் அன்சாரி அவர்கள், #கடைசிவரை_மஜக_உங்களுக்காக_குரல்_கொடுக்கும் என்றார்.
தொடர்ந்து, வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி இறந்த 18 வயதே ஆன #ஸ்னொலின் வீட்டிற்கு சென்றவர், அவரது பெற்றோர்க்கு ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு #பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் கூறியதாவது…
தூத்துக்குடியில் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்ட போலிஸார் மீது #கொலை_வழக்கு பதிவு செய்யவேண்டும். #மண்ணூரிமைக்காக போராடியவர்களை மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். தூத்துக்குடியில் போலிஸார் பொதுமக்களை வீடுதோறும் சென்று #மிரட்டுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. குறிப்பாக #இன்ஸ்பெக்டர்_ஹரிஹரன் மீது #மனித_உரிமை_மீறல்கள் குறித்து புகார்கள் வருவதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நடிகர் #ரஜினிகாந்த் நிபந்தனையற்ற #மன்னிப்பு_கேட்க_வேண்டும்.
இவ்வாறு பேட்டியளித்தார்…
அவருடன் மஜக மாநிலத் துணைச்செயலாளர் புளியங்குடி செய்யது அலி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், தூத்துக்குடி (தெற்கு) மாவட்ட செயலாளர் ஜாகிர், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் நவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இக்பால், நெல்லை மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் நஜிப், MJTS மாவட்ட செயலாளர் ராசிக் முஸம்மில், மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் ஜெய்லானி BABL, தூத்துக்குடி, காயல்ப்பட்டினம், ஆத்தூர் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துக் கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
30.05.2018