(M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள கருத்துப்பதிவு…)
கடந்த மூன்று நாட்கள் முன்பு எகிப்தில் கிறித்தவ தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் நடைபெற்ற அரசு தாக்குதலில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்வீடனில் நடைபெற்ற தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இம்மூன்று சம்பவங்களும் கடும் கண்டனத்திற்குரியது. அப்பாவி மக்களின் மீது நடத்தப்படும் இப்பயங்கரவாத சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இஸ்ரேலிய மொஸாத், IS பயங்கரவாத இயக்கம் ஆகியவை உலக அமைதியை சீர்குலைத்து வருகின்றன.
இவற்றோடு சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு மோதல்களில் கிளர்ச்சி குழுக்களும், அரசும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதின் விளைவாக 3 லட்சம் அப்பாவி சிரியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கான சிரியர்கள் அகதிகளாக திரிகின்றனர்.
சிரியாவின் அமைதியை சீர்குலைத்தத்தில் IS பயங்கரவாத அமைப்புக்கு எந்த அளவிற்கு தொடர்பு உள்ளதோ, அதே அளவிற்கு அமெரிக்க, ரஷ்யா, துருக்கி, ஈரான் ஆகிய 4 நாடுகளின் நியாயமாற்ற தலையீடுகளும் காரணங்களாக உள்ளன.
இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதட்டம் புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருக்கிறது. அமெரிக்காவும், வாடகொரியாவும் நடத்தும் போர் பயிற்சிகள் பீதியூட்டும் வகையில் இருக்கிறது.
ஐ.நா. சபையின் செயலற்ற, பலவீனமான போக்குகள் உலக அமைதிக்கான முன் முயற்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
இச்சுழலில் அனைத்து வகையான வன்முறைகளுக்கும் , பயங்கரவாதத்திற்கும் எதிராக மதத்தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும், பொதுமக்களும் கைகோர்க்க வேண்டிய தருணத்தில் உலகம் இருக்கிறது.
நல்லிணக்கமும், அமைதியும் நிலவும் புதிய உலகம் மலர பிரார்த்திப்போம்.
M. தமிமுன் அன்சாரி MLA,
பொது செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
12.04.2017