காவல்துறையின் வரம்பு மீறல் கண்டிக்கத்தக்கது…

image

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக மறியல் போராட்டம்  நடத்திய பெண்கள்  மீது காவல்துறை  தடியடி நடத்தியதில் இருபதுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பெண்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதல்  அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

மக்கள் போராட்டங்களை நிதானமாக கையாலுவதுதான் காவல்துறையின் கடமையாகும். இப்படி அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது.

மக்கள் விரும்பாத இடங்களில் புதிய  மதுக்கடைகளை  வைப்பது இதுபோன்ற கிளர்ச்சிகளுக்கு தான் வழிவகுக்கும். இவ்விசையத்தில் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும்.

சாமளாபுரத்தில் அப்பாவி பெண்கள் மீது மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட ADSP பாண்டியராஜன் உள்ளிட்ட காவலர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் ஆறுதலும் கிடைக்கும், வரம்பு மீறும் அதிகாரிகளுக்கும் இது பாடமாக அமையும்.

இந்நிலையில் அந்த மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொது செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
12.04.2017