மஜக பொது செயலாளருடன் நேதாஜி சுபாஷ் சேனாவினர் சந்திப்பு…

image

image

மதுரை.ஏப்.12., இன்று  மதுரை வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேதாஜி சுபாஷ் சேனாவின் மாநில தலைவர் டாக்டர்.V. மகாராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் ஆகியோர் உடன் இருந்தார்.

தேவர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் அவற்றை சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துனர். இது குறித்து சட்டமன்றத்தில் பேசுவதாக பொது செயலாளர் வாக்குறுதி அளித்தார்கள்.

சமூக நல்லிணக்கம், சுற்றுசூழல் பாதுகாப்பு, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகிய களங்களில் மஜகவும், நேதாஜி சுபாஷ் சேனாவும் இணைந்து செயல்படுவோம் என இரு தரப்பும் உறுதியேற்றுக் கொண்டனர்.

இறுதியாக மஜக பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சட்டமன்ற உரைகளுக்கும், சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் நேதாஜி சுபாஷ் சேனாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
12.04.2017