You are here

தற்கொலை செய்த நாகை விவசாயி ரமேஷ் பாபு! குடும்பத்தினருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்.!


ஜனவரி 25,

கடந்த சனிக்கிழமையன்று நாகையை சேர்ந்த விவசாயி ரமேஷ் பாபு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கியதை பார்த்து மனமுடைந்து வேதனையில் இம்முடிவை அவர் எடுத்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது

இன்று அவரது இல்லத்திற்கு மஜக பொதுச் செயலாளரும்,நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தஞ்சையில் கடந்த வியாழன் அன்று நடந்த விவசாயிகளின் பச்சைக் கொடி பேரணிக்கு அவர் வருகை தந்ததை நினைவு கூர்ந்தவர், இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

அவரது மூத்த மகன் பட்டதாரியாக இருப்பதால் அவருக்கு அரசு வேலை கிடைக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.

அவருடன் மாவட்ட செயலாளர் செய்யது ரியாஸ் , பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுல்தான், நாகை MLA அலுவலக மக்கள் தொடர்பாளர் முரளி ஆகியோரும் உடன் சென்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#நாகை_மாவட்டம்
25.01.2021

Top