பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி சென்னை கூடுதல் கமிஷனருடன் மஜக மாநிலச் செயலாளர் சந்திப்பு..!

சென்னை. செப்.12., சங்பரிவார அரசியல் ஊர்வலத்தையொட்டி தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அதிக பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை கூடுதல் கமிஷனர் மகேஷ் அகர்வால் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா M.SC. அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்ததோடு விளக்கமாக எடுத்துரைத்தார்.

அவருடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்டப் பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் ரவூப் ரஹீம், எழம்பூர் பகுதி 104 வது வட்ட துணைச் செயளாளர் முகம்மது ஷபி ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்