ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் இமானுவேல் சேகரன்!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை)

தென் தமிழ் நாட்டில் நிறைந்து வாழும் தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் உரிமை குரலாக வாழ்ந்த ஐயா. இமானுவேல் சேகரனின் நினைவேந்தல் வருடந்தோறும் செப்டம்பர் 11 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பின்தங்கிய மக்களின் வாழ்வும், சுயமரியாதையும் மேம்பட உழைத்த தலைவர் அவர்.

கல்வி, தொழில், சமூக அமைப்பு ஆகியவற்றில் அயராது உழைத்து மேம்படுவது ஒன்றே அவருக்கு செலுத்தும் உயர்வான மரியாதையாகும்.

இதற்கு அம்மக்களுடன் இணைந்து அனைவரும் பாடுபட உறுதியேற்போம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11.09.2018