அமைதியும் ஒற்றுமையும் கொண்ட தேசத்தை கட்டமைப்போம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் குடியரசுதின வாழ்த்து செய்தி!


இந்திய திருநாடு தன் 72 வது குடியரசு தின விழாவை கொண்டாடுவது நமக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது.

மக்களாட்சி தத்துவத்தின் வெளிப்பாடுதான் குடியரசு என்ற சொல்லாடலின் பெருமிதமாக அறியப்படுகிதது.

வெவ்வேறு இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் இருப்பினும் ஒன்றுபட்ட மக்களாக வாழ்வதே குடியரசின் சிறப்பாகும்.

இந்நாளில் வெறுப்பு அரசியல், சாதி, மத வெறி, வன்முறை , சுரண்டல் ஆகியவற்றுக்காக எதிராக போராட உறுதியேற்க வேண்டும்.

அமைதியும் ,ஒற்றுமையும் கொண்ட தேசத்தை கட்டமைத்து , ஜனநாயகம் செழித்திட நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று கூறி அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
25.01.2021

Top