துபாய்.ஜூன்.01., நேற்று 31.05.18 ஐக்கிய அரபு அமீரகம் துபையில் அமீரக நாகூர் சங்கம் சார்பில், பிரபல சமூக ஆர்வலர் ஷேக்தாவுது மரைக்காயர் தலைமையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி (இஃப்தார்) நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது #Nagoor_Sangam.com என்ற இணையத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமீரக நாகூர் சங்கம் 'ANAS' என்று சுருக்கமாக கூறப்படுகிறது. 'அனஸ்' என்றால் அன்பு என்று அர்த்தம். நாகூர் மக்களின் மீது கொண்ட அன்பு காரணமாக 'அனஸ்' உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரபல நபித்தோழரின் பெயரும் கூட 'அனஸ் ரலி' என்பதை நினைக்கும் போது, மிக சரியான ஒரு வார்த்தை நாகூர் மக்களை இணைக்கிறது. அனைத்துக் சமூக மக்களும் சேவையாற்ற இச்சங்கம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாடுகளில் வாழும் நாகூர் மக்களை இந்த இணையதளம் இணைக்க விருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இணைய தளத்தை நல்ல வகையில் பயன்படுத்துங்கள். சமூக இணையதளங்களில் பொறுப்புணர்வோடு கருத்துக்களை பகிரவேண்டும். விரைவில் நாகூரில் ஒரு ஐக்கிய ஜமாத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றார். தொகுதி மக்களுக்கு தான் செய்து வரும் பணிகள் குறித்தும் பட்டியலிட்டார். இந்நிகழ்வில் அமீரக
நாகப்பட்டிணம்
தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல்! நாகை MLA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தியாகிகளுக்காக பிராத்தனை..!!
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில், #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். "இதயங்களால் ஒன்றிணைவோம்" என்ற தலைப்பில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பங்குபெற்று "நாகை தொகுதி" யின் பண்பாட்டை வெளிக்காட்டினர். மாலை 4 மணியிலிருந்தே தொகுதியை சேர்ந்த பல்வேறு சமூக இளைஞர்கள் தன்னார்வத்துடன் வருகை தந்து, நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி விருந்தோம்பலுக்கான பணிகளை முன்னின்று செய்தனர். அரங்கத்தின் நுழைவாயிலில் "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் திறந்த தியாகிகளின் குடும்பத்தினர் ஆறுதல் பெற பிராத்தியுங்கள் "என்ற பதாகை அனைவரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்த்தது. அதுபோல் வளாகத்தில் நாகை MLA அலுவலகத்தின் சார்பில் "நகர்வு அலுவலகம்" அமைக்கப்பட்டு, அதில் அலுவலக ஊழியர் சம்பத் தலைமையில் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதுபோல் ஏராளமானோர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான பரிந்துரை கடிதங்களை பெற்று சென்றார். பலர் கொடுத்த மனுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், அமைச்சரிடமும் உடனுக்குடன் கையளிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கெல்லாம் மக்கள் வரத் தொடங்கினர். பெண்களும் வந்ததால், அவர்களுக்கு தனிப்பிரிவு
பயணிகள் நிழலகம் திறப்பு விழா…! நாகை MLA பங்கேற்பு..!!
நாகை; 12.05.18. நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம், அந்தனப்பேட்டை ஊராட்சி, புத்தூர் அண்ணாசிலை அருகில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழலகத்தை சட்டமன்ற உறுப்பினர் #மு.தமிமுன்_ அன்சாரி MLA_அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_ அலுவலகம். 12.05.18
நாகூரில் மார்க் துறைமுகத்திற்கு எதிராக போராடிய 64பேர் ஜாமீனில் விடுதலை..! AS.அலாவுதீன் உள்ளிட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலை சென்று வரவேற்பு..!
திருச்சி.மே.11., கடந்த மே.04 ம் தேதி காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக நாகூரில் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய 64பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்களுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. நேற்று மாலையில் இருந்து அவர்களை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வரும் பணியில் நாகூரைச் சேர்ந்த சாஹா மாலிம் உமர், சாகுல், ஹபீப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினருடன் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையிலான ஒரு குழுவும் ஈடுபட்டனர். மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உமர் பாரூக், சாகுல்,ஹபீப் ஆகியோருடன் அலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசிவந்தார்கள். இன்று காலை மஜக மாநில நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட துணை செயலாளர் SM. ரபீக், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் ஏர்போர்ட் சதாம் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் நாகூர் மக்களுடன் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று, விடுதலை ஆகி வெளியில் வந்த எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்ட 64 பேரையும் சிறைவாசலில்
தமிழக முதல்வருடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு.!
மே-15 தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க வேண்டும்..! ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை சுமுகமாக தீர்க்க வேண்டும்..! நாகூர் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! (தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..) இன்று (09-04-18) தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவரது கிரீன்வேஸ் இல்ல வீட்டில் சந்தித்துப் பேசினார். நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், காரைக்காலில் அமைந்துள்ள 'மார்க்' தனியார் துறைமுகத்தால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதனால், அங்கு நிலக்கரியை நிரந்தரமாக இறக்குமதி செய்ய தடை விதிக்க புதுவை அரசுக்கு, தமிழக அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கடந்த மே 4 அன்று நாகூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, 64 பேர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமலான் நோன்பு கஞ்சிக்கு, தமிழக அரசு சார்பில் வினியோகிக்கப்படும் இலவச அரிசியை மே 15 தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கிடைக்க செய்யும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்