நாகூரில் மார்க் துறைமுகத்திற்கு எதிராக போராடிய 64பேர் ஜாமீனில் விடுதலை..! AS.அலாவுதீன் உள்ளிட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலை சென்று வரவேற்பு..!

திருச்சி.மே.11., கடந்த மே.04 ம் தேதி காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக நாகூரில் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய 64பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்களுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது.

நேற்று மாலையில் இருந்து அவர்களை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வரும் பணியில் நாகூரைச் சேர்ந்த சாஹா மாலிம் உமர், சாகுல், ஹபீப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினருடன் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையிலான ஒரு குழுவும் ஈடுபட்டனர்.

மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உமர் பாரூக், சாகுல்,ஹபீப் ஆகியோருடன் அலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசிவந்தார்கள்.

இன்று காலை மஜக மாநில நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட துணை செயலாளர் SM. ரபீக், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் ஏர்போர்ட் சதாம் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் நாகூர் மக்களுடன் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று, விடுதலை ஆகி வெளியில் வந்த எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்ட 64 பேரையும் சிறைவாசலில் வரவேற்றனர்.

இதில் மஜக, தமுமுக, SDPI, இந்திய தேசிய லீக் ஆகிய கட்சி, மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர். அனைவரும் பேருந்து மற்றும் கார்கள் மூலம் நாகூர் புறப்பட்டனர். அனைவரையும் வழியனுப்பி வைத்த பின்னர் இறுதியாக ஏ.எஸ். அலாவுதீன் தலைமையிலான மஜக குழுவினர் சிறைச்சாலை வளாகத்திலிருந்து புறப்பட்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாவட்டம்.
11.05.2018