தமிழக முதல்வருடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு.!

மே-15 தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க வேண்டும்..!

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை சுமுகமாக தீர்க்க வேண்டும்..!

நாகூர் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..!

(தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..)

இன்று (09-04-18) தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவரது கிரீன்வேஸ் இல்ல வீட்டில் சந்தித்துப் பேசினார்.

நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், காரைக்காலில் அமைந்துள்ள ‘மார்க்’ தனியார் துறைமுகத்தால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதனால், அங்கு நிலக்கரியை நிரந்தரமாக இறக்குமதி செய்ய தடை விதிக்க புதுவை அரசுக்கு, தமிழக அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கடந்த மே 4 அன்று நாகூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, 64 பேர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ரமலான் நோன்பு கஞ்சிக்கு, தமிழக அரசு சார்பில் வினியோகிக்கப்படும் இலவச அரிசியை மே 15 தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கிடைக்க செய்யும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜாக்டோ, ஜியோ அரசு ஊழியர்களின் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலிமை வாய்ந்த அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதிலும் தமிழக அரசு உறுதிக் காட்ட வேண்டும் என்றும், ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன் விடுதலையை பாரபட்சமின்றி செய்துக் கொடுக்க வேண்டும் என்றும், பரோலில் செல்லும் கைதிகளுக்கு ‘வழி காவல்’ இன்றி நிம்மதியாக சென்று வர ஆவணம் செய்ய வேண்டும். என்றும் தமிழக சிறைகளில் உயிரிழக்கும் கைதிகளின் குடும்பத்தனரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேனி மாவட்ட துலுக்கப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் போன்ற ஊர்களில் ஏற்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்க காவல் துறையை நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மஜக பொதுச்செயலாளர் கொடுத்த கோரிக்கைகளையும், கடிதங்களையும் படித்த முதல்வர் அவர்கள் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசுவதாகவும் கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
09.05.2018