திருச்சி.மார்ச்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொருளாளர் அஷ்ரப் அலி துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ஜம்ஜம் பஷீர், ரபீக், காட்டூர் பஷீர் ஆகியோர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மைதீன், தொழில்சங்க மாவட்ட செயலாளர் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அலி சேட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.. #தீர்மானங்கள் 1.மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கிளைகளில் கொடியேற்றி சிறப்பிப்பது எனவும், 2.கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது எனவும், 3.மிக விரைவில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஏக மனதாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WINK திருச்சி மாவட்டம் 24.03.17
Author: admin
சச்சார் கமிட்டி பரிந்துரைகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு…
(பகுதி_3) முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதார, வாழ்வியல் குறித்த தனது ஆய்வறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவற்றை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் அது எந்த அளவுக்கு செயல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு விரிவான அறிக்கையை நமது அம்மா அவர்களின் அரசு வெளிப்படுத்தினால்,அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதில் equal opportunity commission, அமைக்கப்பட வேண்டும் என நீதியரசர் சச்சார் அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நீதியரசர் சச்சார் அவர்களின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அத்தகைய ஆணையகத்தை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அமைக்க முன் வரவேண்டும் என்று பேரவை தலைவர் வழியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். #இட_ஒதுக்கீடு இட ஒதுக்கீடு 3.5% முறையாக எல்லா துறைகளிலும் அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24_03_17
மஜக ஒன்றிய துணை செயலாளருக்கு சமூக சேவை விருது…!
நாகை.மார்ச்.24., நாகை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி-யின் திருமருகல் ஒன்றிய துணை செயலாளர் ஏனங்குடி_நூருல்_ஷமீம் அவர்கள் பல்வேறு விபத்துக்கள் மற்றும் அவசர தேவைகள் ஏற்படும் போது துரிதமாக செயல்பட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்க்காக "சிறந்த சமூக சேவைக்கான" விருது 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மூலமாக தீயணைப்பு அதிகாரி முன்னிலையில் #திருவாரூர்_DSP அவர்களால் வழங்கப்பட்டது. #சகோதரர் சமூக சேவையில் தொடந்து பயணிக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம். மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி, MJK IT WINK திருமருகல் ஒன்றியம், நாகை தெற்கு மாவட்டம். 24.3.17
பல்கலைக்கழகங்களில்_சமூக_நீதி!
(இன்று சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் ஒரு பகுதி) பேரவை தலைவர் அவர்களே.... தமிழ்நாட்டில் 21 பல்கலைக்கழகங்களில் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லை.8 பல்கலைக்கழகங்களில் பதிவாளர் இல்லை.10 பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் (exam controller) இல்லை. இதில் சமூக நீதி பேணப்பட வேண்டும்.இது சமூக நீதியை மதிக்கும் அம்மாவின் அரசு.எனவே முஸ்லிம்களுக்கும்,கிறித்தவர்களுக்கும்,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் உரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 23_03_17
சிறைவாசிகளை விடுதலை செய்க! சட்டமன்றத்தில் மீண்டும் தமிமுன் அன்சாரி MLA_பேச்சு!
சட்டமன்ற உரை : பேரறிவாளன் தாயார் வீரமங்கை #அற்புதம்மாள் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பாக பேரறிவாளனின் விடுதலை குறித்து நமது முன்னாள் #முதல்வர்_அம்மா அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை இந்த அவைக்கு நினைவூட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரின் விடுதலைக்கு நாம் உதவிட முயற்ச்சிகளை எடுக்க வேண்டும். 14 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை, சமூக வழக்குகள் உட்பட எந்த வழக்கில் தண்டனைப் பெற்றிருந்தாலும், சாதி, மத, அரசியல் பேதமின்றி அவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பாஷா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 23_03_17