சட்டமன்ற உரை : பேரறிவாளன் தாயார் வீரமங்கை #அற்புதம்மாள் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பாக பேரறிவாளனின் விடுதலை குறித்து நமது முன்னாள் #முதல்வர்_அம்மா அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதை இந்த அவைக்கு நினைவூட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரின் விடுதலைக்கு நாம் உதவிட முயற்ச்சிகளை எடுக்க வேண்டும்.
14 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை, சமூக வழக்குகள் உட்பட எந்த வழக்கில் தண்டனைப் பெற்றிருந்தாலும், சாதி, மத, அரசியல் பேதமின்றி அவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பாஷா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
23_03_17