வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் அவர்களின் உடல் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்புடன் இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் திரளான பொது மக்களும் , தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினரும் பங்கேற்றனர்.
இன்று இரவு அவரது இல்லத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், மாநில துணைச்செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோரும் வருகை தந்து அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கூறியதாவது..
கஞ்சா வினியோக கும்பலுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் , வசீம் அக்ரம் கூலிப்படை மூலம் கொல்லப்பட்டிருக்கிறார். இது தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
காவல்துறை எஞ்சிய குற்றவாளிகளை துரிதமாக கைது செய்ய வேண்டும். ஆரம்பத்தில் வழக்கில் வேகம் காட்டி விட்டு பிறகு நீர்த்துப் போக செய்து விடக் கூடாது. அவர்கள் விரைந்து சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்விஷயத்தில் காவல்துறை தலைவர் திரு.சைலத்திர பாபு அவர்களை சந்தித்து முறையிடுவோம்.
தமிழக அரசு கஞ்சா வினியோக கும்பலுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கொல்லப்பட்ட வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் கருணை தொகையை வழங்க வேண்டும் என்றும், அவரது மனைவிக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
வசீம் அக்ரம் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்ட கட்சிகள், இயக்கங்களின் தலைவர்களுக்கும், ஆறுதலை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வசீம் அக்ரம் ஆற்றிய மக்கள் சேவைகளுக்காக பிரார்த்திக்கிறோம்.
அவரது குடும்பத்தினருக்கு என்றும் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு அங்கு திரண்டிருந்த மஜகவினருக்கும், அவ்வூர் மக்களுக்கும் அவரும், தலைமை நிர்வாகிகளும் ஆறுதல் கூறினர்.
அப்போது மஜக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜமான், வாணியம்பாடி அனைத்து இயக்க கூட்டமைப்பு தலைவர் நாசிர் கான் மற்றும் ஊர் பிரமுகர்களும் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பத்தூர்_மாவட்டம்
11.09.21