சச்சார் கமிட்டி பரிந்துரைகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

(பகுதி_3)

முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதார, வாழ்வியல் குறித்த தனது ஆய்வறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவற்றை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் அது எந்த அளவுக்கு செயல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு விரிவான அறிக்கையை நமது அம்மா அவர்களின் அரசு வெளிப்படுத்தினால்,அது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் அதில் equal opportunity commission, அமைக்கப்பட வேண்டும் என நீதியரசர் சச்சார் அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, நீதியரசர் சச்சார் அவர்களின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அத்தகைய ஆணையகத்தை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அமைக்க முன் வரவேண்டும் என்று பேரவை தலைவர் வழியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

#இட_ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு 3.5% முறையாக எல்லா துறைகளிலும் அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
24_03_17