நாகை. ஏப்.18., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும், பள்ளிக்கட்டிடங்களுக்கு டைல்ஸ் அமைத்திடவும் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்து எண்பதாயிரம் (3,80,000/-) நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி.MA., அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர், கிராமவாசிகள், மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நாகப்பட்டினம் 18.04.2017
Author: admin
IKP தலைமை நியமன அறிவிப்பு…
ரியாத் மண்டல இஸ்லாமிய கலாச்சார பேரவையின் (IKP) நிர்வாகிகள் நியமனம். 1) A.ஹாஜாகமருதின் மண்டல செயலாளர் அடியற்கைமங்களம் திருவாரூர் (மாவட்டம்) செல் - 00966506914421 2) நிவஜீதின். மண்டல பொருலாளர் அடியற்கைமங்களம் திருவாரூர் (மாவட்டம்) செல்-00966532019517 3) நாகை NS.ஹமீது மண்டல தலைமை ஆலோசகர் இரட்டை மதகடி, நாகை மாவட்டம் செல்-00966508825332 4)A.ஜாகிர்உசேன் மண்டலதுனை செயலாளர் திருச்சி செல் - 00966533457299 5) N.அவுலீயா முஹம்மது நெடுங்குடி மண்டலதுனை செயலாளர் செல் - 00966502494472 6)S.சிக்கந்தர் மண்டல துனை செயலாளர் மதுரை செல் - 00966591523384 7)PM.முகம்மது கனி மண்டல துணை செயலாளர் பத்தமடை, திருநெல்வேலி செல் - 00966571791098 8) நைனார் முகம்மது மண்டல துணை செயலாளர், சென்னை செல் - 00966509655885 9) ஹாஜா மைதீன் மண்டல சட்ட ஆலோசகர் திருவிடச்சேரி செல் - 00966503322382 10) யூசுப்தின் மண்டல துணை செயலாளர் அடியற்கைமங்களம் செல் - 0096655421855 இவர்களுக்கு சகோதரர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்குறோம். இவண், என்.ஏ. தைமிய்யா M.sc. ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP)
திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக SP அலுவலகம் முற்றுகை போராட்டம்…
திண்டுக்கல். ஏப்.17., இன்று காலை 11-மணியலவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வரும் ஆண்டிகுளம் ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக புகார்அளிதனர், எந்த பலனும் இல்லாத நிலையில் திண்டுக்கல் மாவட்ட SP திரு.சரவணன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துனர். இவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாகவும், தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர். திரு.சரவணன் அவர்களை கண்டித்து SP அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது . இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலமையில், மாவட்ட பொருலாளர் U.மரைக்காயர் சேட் முன்னிலையில், மாநில இணை பொதுசெயலாளர் K.M.முகம்மது மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M.அன்சாரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். உடன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் பழனி சாந்து முகம்மது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர்
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை. ஏப்.16., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (16.04.17) மாலை 7.00 மணியளவில் குடந்தை அனஸ் ரெஸ்டாரெண்ட்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் நீதி போதனையாற்றினார். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் மத்திய மோடி அரசை கண்டித்து எதிர்வரும் 19.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு குடந்தையில் ரயில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மஜக விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் தமிழக விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து கூறினார்கள். மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் ரயில் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள் அதனை தொடர்ந்து ஏப்ரல்.30 அன்று சோழபுரம் பொதுக்கூட்டம் அழைப்பு பணிகள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் நன்றி உரையாற்றினார். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு 16.04.2017.
டாஸ்மார்க் கடைய அகற்றக்கோரி மஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்மார்க் கடையை அகற்ற கோரியும், இனி வரும் காலங்களில் பொன்பேத்தி கிராமத்திற்க்குல் டாஸ்மார்க் வைக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மஜக கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் ஆகியோருடன் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, சையது அபுதாஹீர், அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் ஜமின், நகர பொருளாளர் ஜகுபர் சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பாஷித் கான், மேற்கு மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன்,