சென்னை.மே.21., இன்று 21.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி சிட்கோ நகர் 94, 95-வது கிளையில் மூன்று இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் P.M.ஷாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் பீர் முஹம்மது, R.K.மைதீன் ஆகியோர் கொடி ஏற்றி வைத்தார்கள். அம்பத்தூர் நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர் P. M.ஷாகுல் ஹமிது, து.செயலாளர் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING மத்திய சென்னை மாவட்டம். 21.05.2017
Author: admin
நாகையில் மெல்ல மெல்ல சீராகும் தண்ணீர் விநியோகம்…!
நாகை.மே.19., நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நாகை சடமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கலெக்டர் மூலம் தொடர் முயற்சிகளை மேற்க்கொண்டார். TWAD மூலம் கொள்ளிடத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி பெற்றார். இதுபோக, அந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக தற்போது கீழ்வேளூரில் புதிய ஆழ்துளை கிணறு ரூபாய் 25 லட்சம் செலவில் போடப்பட்டு தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் நாகை நராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துரித கதியில் செயல்பட்ட கலெக்டர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கும், நகராட்சி ஆணையர் ஜான்சன் அவர்களுக்கும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மே, ஜூன், ஜுலை, ஆகஸ்டு ஆகிய நான்கு மாதங்களுக்கான நாகை நகராட்சியின் தண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 19.05.17
பெருந்தோட்டத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…
நாகை.மே.19., நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்க பெருந்தோட்டத்தில் இன்று 19.05.2017 வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொது செயலாளர் K.M.மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N. M.மாலிக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கலந்துக்கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING நாகை வடக்கு மாவட்டம் 19.05.2017
IKP தலைமையக நியமன அறிவிப்பு…
மாணவர் இந்தியா 2-நாள் பயற்சி முகாம் : மாணவர்கள் உற்சாகம்…
மகாபலிபுரம்.மே.17., பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சமகால அரசியலை புரிந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவர் இந்தியா இரண்டு நாள் பயற்சி முகாமை மகாபலிபுரம் அருகில் உள்ள கடம்பாடி கிராமத்தில் 2017 மே-13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்தது. முதல் அமர்வு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் “மாணவர்களும் அரசியலும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பாலிமர் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ரஹ்மான் அவர்கள் இன்றைய "ஊடகங்கள் உண்மையானதா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா "மாணவர்களின் அறம்” எனும் தலைப்பிலும் பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். இரண்டாம் அமர்வு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் தலைவர் இளையராஜா அவர்கள் “மாணவர்கள் ஏன் போராட வேண்டும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலை தேநீர் இடைவேளைக்கு பிறகு : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “இன்றைய அரசியலும் மாணவர்களும்” எனும் தலைப்பில் விரிவுரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்து நிகழ்ச்சியை மெருகூட்டினார்.