நாகையில் மெல்ல மெல்ல சீராகும் தண்ணீர் விநியோகம்…!

image

image

நாகை.மே.19., நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நாகை சடமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கலெக்டர் மூலம் தொடர் முயற்சிகளை மேற்க்கொண்டார். TWAD மூலம் கொள்ளிடத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி பெற்றார்.

இதுபோக, அந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக தற்போது கீழ்வேளூரில் புதிய ஆழ்துளை கிணறு ரூபாய் 25 லட்சம்  செலவில்  போடப்பட்டு தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் நாகை நராட்சிக்கு  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

துரித கதியில் செயல்பட்ட கலெக்டர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கும், நகராட்சி ஆணையர் ஜான்சன் அவர்களுக்கும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மே, ஜூன், ஜுலை, ஆகஸ்டு ஆகிய நான்கு மாதங்களுக்கான நாகை நகராட்சியின் தண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,
19.05.17