தொண்டி.டிச.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு கட்சி பணிகள் மற்றும் ஜமாதார்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.
அதன் ஒரு பகுதியாக தொண்டி வருகை தந்த தமிமுன் அன்சாரி அவர்கள் மஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பிறகு ஜமாத்தார்களுடன் நல்லெண்ண சந்திப்பு நடைபெற்றது.
அப்போது ஜமாஅத்தினர் தங்கள் தொகுதி MLA கருணாஸ் மூலம் தங்கள் ஊருக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர், விரைவில் கருணாசுடன் வருகை தந்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்குறுத்தியளித்தார்.
இதில் வடக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள் ரசூல் மைதீன், மஜக தொண்டி நகர செயலாளர் சீனி முகம்மது, பொருளாளர் ரகுமான் தொழிலாளர் அணி ஷேக் மைதீன், துணை செயலாளர் ராவுத்தர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_கிழக்கு