MKP அல் அய்ன் மாநகர சார்பாக நடைபெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

மார்ச்.25.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை ஐக்கிய அரபு அமீரக மண்டல, அல் அய்ன் மாநகரம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி (23.03.2024) மாலை அல்தோபாவில் அல் அய்ன் மாநகர செயலாளர் S.முஹம்மது இம்ரான் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக A.அப்துல் காதிர் அவர்கள் கிரா அத் ஓதி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் Dr.A.அசாலி அஹ்மது அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேலான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அமீரக மண்டல மூத்த ஆலோசகர் M.சேக் தாவூத், அமீரக மண்டல கௌரவ ஆலோசகர் அபுல் ஹசன், அமீரக துணை செயலாளர் M.அப்துல் நாசர்,அமீரக செயற்குழு உறுப்பினர்கள் இலந்தங்குடி M.முகம்மது யூசுப், பூதமங்கலம் A.ஜாகிர் உசேன் உள்ளிட்ட அபுதாபி மாநகர மற்றும் அல் அய்ன் மாநகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.!

நிகழ்வின் இறுதியில் அல் அய்ன் மாநகர பொருளாளர் N.M பஜ்லுல் ஹக் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே நிறைவுற்றது.

தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKPitWING
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#அல்_அய்ன்_மாநகரம்
#ஐக்கிய_அமீரகம்
23.03.2024.