You are here

நாகை நாடாளுமன்ற தேர்தல் களம்… திருவாரூரில்… முதல்வர் கூட்டத்தில் எங்கெங்கு காணினும் மஜக கொடிகள்…

மார்ச்.24.,

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தீவிர கள வேலை செய்யும் பொருட்டு, மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.

தற்போது மஜக-வினர் களத்தில் தீவிரமாய் பணியாற்ற புறப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் நாகை தொகுதியின் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள்.

இந்நிகழ்வில் திரும்பும் திசை எங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

இது முதல்வரின் பார்வையை வெகுவாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
24.03.2024.

Top