(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசுக் கெதிராக கண்டனக் குரல்கள் எழுப்பி வரும் சூழ்நிலையில் மே-17 இயக்கமும் பல்வேறு இடங்களில் ஈழம் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம். அந்த அடிப்டையில் கடந்த மே-17 அன்று முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக தோழர் திருமுருகன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வை மே-17 இயக்கம் சென்னை மெரினாவில் நடத்தியது. இதே போன்று மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மே-17 இயக்கம் பல்வேறு வடிவங்களில் எதிர்த்து வந்தது. இந்நிலையில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்திய திருமுருகன், அருண்குமார் , இளமாறன் மற்றும் டைசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக ஆர்வலரும் , மனித உரிமை களத்தில் தொடர்ந்து போராடி வருபவருமான திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்பதும், மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதும் சமூக
Author: admin
வேலூர் கணியம்பாடி ஒன்றியத்தில் மஜக புதிய கிளைகள் துவக்கம்..!
வேலூர்.மே.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி கணியம்பாடி ஒன்றியத்தில் 2 புதிய கிளைகள் துவக்கம். மாவட்ட அமைப்புகுழு முஹம்மத் ஜாபர் அவர்கள் முன்னிலையில், பென்னாத்தூர் பேரூராட்ச்சி 3 வது வார்டு சப்தலிபுரம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். கிளை செயலாளர் : பியாரு கிளை பொருளாளர் : ரசூல் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். வேப்பம்பட்டு ஊராட்சி கிளை கிளை செயலாளர்: அப்சல், கிளை பொருளாளர் : ஷயின்ஷா துணை செயலாளர்கள் : இம்தியாஸ், மதீன், பசல், இளைஞர் அணி செயலாளர் : முன்னா ஆகியோர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மனிதநேயத்துடன் சகோதரர்கள் களப்பணி சிறக்க இறைவனை பிரார்த்திப்போம். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING, வேலூர் கிழக்கு மாவட்டம். 25.05.2017.
மஜக பொள்ளாச்சி நகர நிர்வாகக்குழு கூட்டம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு!!
கோவை.மே.21., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர நிர்வாகக் குழுகூட்டம் நகர செயலாளர் ஜெமிஷா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் கோவை பாருக், கோவை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கு.சுதீர் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகர அணி மற்றும் வார்டு பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 15+நாளுக்கு ஒருமுறை நிர்வாகக்குழு கூட்டுவது என்று முடிவுசெய்யப்பட்டது! ரமலான் மாதம் முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக நன்கொடையாளர்களை சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டது!! 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது!! 40க்கும் மேற்பட்ட புதிய கிளைகள் தொடங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது!! தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம். #MJK_IT_WING 21.05.2017
நீடூர் நெய்வாசல் மஜக கிளை கூட்டம், நிர்வாகிகள் தேர்வு…
நாகை.மே.22., நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை கூட்டம் நேற்று 21-05-2017 இரவு 8.00 மணிக்கு நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக் அவர்கள் தலைமையில், துணை செயலாளர் இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மிஸ்பா, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நீடூர் நெய்வாசல் கிளை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது #கிளை_செயலாளர் : S.அசாருதீன் #துணை_செயலாளர்கள் : S.நசுருதீன் M.பஹத் J.சிராஜூதீன் #பொருளாளர் : F.சுகைல் #இளைஞரணி_செயலாளர் : K.ராசீத் #மாணவரணி_செயலாளர் : J.ஜாசீப் #மாணவரணி_துணை_செயலாளர்கள் : S.நூர்முஹம்மது I.முஹம்மது உசேன் #தொழிலாளர்_அணி : A.R.பைசுல்ரஹ்மான் #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை : M.அஹமது #மாணவர்_இந்தியா : A.ஹாக்கில் #மருத்துவரணி : F.ஃபஹத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் இவண், தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி நீடூர் நெய்வாசல் கிளை நாகை வடக்கு மாவட்டம். #MJK_IT_WING 21.05.2017
கமலாபுரத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…
திருவாரூர்.மே.21., திருவாரூர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை கமலாபுரத்தில் இன்று 21/05/2017 துவங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலிமற்றும் அடியக்கமங்கலம் நிஜாமுதீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ், பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முகம்மது மற்றும் புலிவலம் கிளை செயலாளர் சேத்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இதில் முக்கிய நிகழ்வாக அமல்ராஜ், அன்புராஜ், ஐயப்பன், ராஜ்கிரண், சரண்ராஜ், கவியரசன், பிரசாத், பிரவீன்ராஜ், ரகுவரன், மற்றும் முரளி ஆகியோர் 11 நபர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் #MJK_IT_WING 21.05.2017