நாகை.ஜூன்.01., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சகோ.N.M.மாலிக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மிஸ்பா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், செம்பனார் கோவில் ஒன்றிய செயலாளர் நிஜாம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், மயிலாடுதுறை ஒன்றிய துணை செயலாளர் நிசார் அஹமது ஆகியோர்கள் முன்னிலை
Author: admin
மாடு விற்பனையில் கட்டுப்பாடு மஜகவின் சார்பில் நாகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
நாகை.மே.31., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் சார்பாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்த மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் S.செய்யது ரியாசுதீன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் AHM.ஹமீது ஜெகபர் வரவேற்புரையாற்றினர், மாவட்ட பொருளாலர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தின், மாவட்ட அணிச் செயலாளர்கள் தெத்தி ஆரிப், பிஸ்மி யூசுப், ரெக்ஸ் சுல்தான், ஓன்றிய செயலாளர் ஏனங்குடி முஜிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் H. ஷேக் அப்துல்லாஹ் தொடங்கி வைத்தார். மாநில விவசாய அணி செயலாளர் N.செய்யது முபாரக், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜிதீன், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் கண்டன உரையற்றினார்கள். மற்றும் நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, வேதை நகர செயலாளர் ஷேக் அஹமதுல்லா, திட்டச்சேரி போரூர் செயலாளர் ரிஸ்வான், நாகூர் நகர துனை செயலாளர் இப்ராஹீம், நாகை ஒன்றிய துணை செயலாளர் பாவா சாஹிப் மற்றும் நகர
சென்னை IIT மாணவர் சூரஜ் மீது நடத்திய தாக்குதலுக்கு மாணவர் இந்தியா கடும் கண்டனம்.
இறைச்சிக்காக மாடுகளை வெட்டக்கூடாது என்கிற மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து நாடெங்கும் பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாட்டுக்கறி உணவை சென்னை IIT வளாகத்திலுள்ள உணவகத்தில் சாப்பிட்டதற்காக சென்னை ஐஐடி மாணவர் சூரஜை தாக்கியது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த மனீஷ் குமார் சிங் உட்பட குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மாணவர் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி குண்டர்களை உடனடியாக கைது செய்யுமாறு தமிழக அசை மாணவர் இந்தியா வலியுறுத்துகிறது. ABVP குண்டர்களை கைது செய்வதோடு மட்டமல்லாமல் அவர்களின் தீவிரவாத நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உணவு பழக்கத்தின் மூலம் மக்களிடையே பிளவு அரசியலை ஏற்படுத்தும் சங்பரிவார பிஜேபி யின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க மாணவர்களை ஒன்றிணைத்து மாணவர் இந்தியா போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா சென்னை 31.05.2017
கோவை மஜக நிர்வாகிகளுடன் தெற்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.மே.30., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் சுல்தான் அமீர் அவர்களை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மாட்டிறைச்சி தடையால் தற்போது அவர்கள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் 01.06.2017 வியாழன் அன்று மஜக சார்பில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தாங்களும் கலந்துகொள்வதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநிலசெயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் பதுருதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் மற்றும் ஆத்துப்பாலம் அபு ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 30.05.2017
மாட்டிறைச்சி தடை சட்டத்தை கண்டித்து மஜக முற்றுகை போராட்டம்- 300 க்கும் மேற்பட்டோர் கைது…
சென்னை.மே.30., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை மவுண்ட் ரோடு, அண்ணா சாலையிலுள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் வே.மதிமாறன், பகுஜன் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு கைதாகினர். தகவல்; தகவல்