(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த நான்கு நாடுகளும் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஈரானின் புதிய அதிபர் ஹஸன் ரவுஹானியை கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல்தானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை ஒரு குற்றமாக அந்நாடுகள் கூறியுள்ளன. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தந்திரங்களும், திட்டங்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை. கத்தார் அமெரிக்காவுடன் ஒரு இடைவெளியை கடைப்பிடிக்கிறது. இது தவிர எகிப்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மொர்ஸி அவர்களின் ஆட்சி கவிழ்ப்பை அந்த நான்கு நாடுகளும் ஆதரித்தன. அமெரிக்காவும் ஆதரித்தது. ஆனால் கத்தார் எதிர்த்ததையும் இங்கே கவனிக்க வேண்டும் . கத்தார், பாலஸ்தீன போராட்டத்திற்கு துருக்கியை போலவே குறிப்பாக ஹமாஸ் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தரும் நாடு . மேலும் CNN, BBC ஊடகங்களுக்கு மாற்றாக அல்ஜெஸிரா எனும்
Author: admin
திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
திருப்பூர்.ஜூன்.07., நேற்று இரவு 8 மணியளவில் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம்.1 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகளை தேர்வு செய்து பரிந்துரை செய்த மாநில துணைச் செயலாளர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுக்கும், பரிந்துரையை ஏற்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளாக நியமணம் செய்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்.2 இந்த புனிதமிகு ரமலானில் பல்லாண்டுகள் சிறையில் வாடும் சிறைவாசிகள் விடுதலைக்காக பிரார்த்தனை செய்ய வலியுறுத்தி சுவரொட்டி பிரச்சாரம் செய்வதெனவும். தீர்மானம்.3 திருப்பூர் குருவாயூரப்பன் நகர் பள்ளிவாசல் பிரச்சனையில் தலையிட்டு சுமுகமாக நிலையை எட்ட பொதுச்செயலாளர் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் படி அந்த பள்ளி நிர்வாகத்தை 07.06.17 அன்று சந்திக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் .4 திருப்பூரில் தொடர்ந்து குறிப்பிட்ட அமைப்புகள் கட்சிகளை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படும் கூட்டமைப்பை கண்டித்தும், இப்படியாக தொடர்ந்து புறக்கணிப்பட்டவர்கள் ஓரணியில் இணைந்து அனைத்து இஸ்லாமிய இயக்களின் கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அக்பர் அலி, அப்பாஸ், ஈஸ்வரன்,
மஜக அடியர்க்கை கிளை ஆலோசனை கூட்டம்…
திருவாரூர்.ஜூன்.07., திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் 06/06/2017 நேற்று மாலை கிளை அலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையிலும், கிளை துணை செயலாளர் அமீர் அலி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ரியாத் மண்டலப் பொறுப்பாளர் கமருதீன் மற்றும் அபுதாபி மண்டல பொறுப்பாளர் லியாகத் அலி அவர்களும் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, திருவாரூர் மாவட்டம். #MJK_IT_WING 06.06.2017
மாணவர் இந்தியா-நியமன அறிவிப்பு
திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக B.நௌஃபல் ரிஸ்வான் தொடர்பு எண் : 9965158498 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். அமைப்பின் மாவட்டம்,ஒன்றியம்,பகுதி,கிளை நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவண் ; முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா 06.06.2017
M.C.ராஜ் மரணம்! தேர்தல் சீர்திருத்தத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்) இந்தியாவில் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்ற முழக்கத்தோடு ஒற்றை ஆளுமையாய் நாடு முழுக்க வலம் வந்தவர் தோழர் M.C.ராஜ் அவர்கள். இதற்காக 'CERI' என்ற அமைப்பை தோற்றுவித்து ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளது போன்ற 'விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை' இந்தியாவுக்கு தேவை என்பதை பரப்புரையாக்கினார். இக்கோரிக்கையை கடந்த 25 ஆண்டுகளில் இவர் அளவுக்கு இதுவரை யாரும் முன்னெடுத்து செயல்படவில்லை. நாடு முழுக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் சேவை இயக்க களங்களின் இது குறித்து கருத்தரங்குகளை நடத்தி அறிவுஜீவிகளை அணி திரட்டினார். CERI அமைப்பில் தமிழகம் சார்பில் நானும், விசிக-வின் துணைப் பொதுச்செயலாளர் தோழர்.சிந்தனை செல்வனும் இடம் பெற்று நாடு முழுக்க பயணித்தோம். தலைநகர் டெல்லியில் பல கருத்தரங்களில் பேசிடும் வாய்ப்பை M.C.ராஜ் அவர்கள் எங்களுக்கு வழங்கினார்கள். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்களின் போது, கடும் குளிரில் நாங்கள் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வீடுகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சென்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து விளக்கமளித்தோம். அந்த மாபெரும் சேவையில் M.C.ராஜ் அவர்கள் எங்களை வழி நடத்தினார். இதன் மூலம் நாடறிந்த தலைவர்களோடு உரையாடும் வாய்ப்பும் , அறிமுகமும்