மார்ச்.02.,
ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் பிப்ரவரி 28 அன்று நடைபெற்றது.
இதில் நம்பிக்கையூட்டக் கூடிய வகையில் 60 சதவீத நிர்வாகிகள் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உற்சாகம் ததும்ப வலம் வந்தனர்.
மண்டப வாசலில் கட்சி பேனருடன் தற்படம் ( Selfi ) எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் படம் எடுக்க அவர்கள் காட்டிய ஆர்வம் பரபரப்பாக இருந்தது.
முகநூல், வாட்ஸ் அப் ஆகியவற்றை கடந்து INSTAGRAM – சமூக வலைப்பதிவில் ஈடுபாடு கொண்ட ஒரு தலைமுறையினராக அவர்கள் இருந்தனர்.
திரளான இளைஞர்கள் வருகை தந்த நிலையில், இளைஞர் அணிக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக கவுண்டரில் கூட்டம் அலைமோதியது.
மாநில இளைஞர் அணி செயலாளர் புதுமடம் ஃபைசல் தலைமையில் இவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தகவல் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அலை, அலையாய் திரண்ட இளைஞர்களை, நீடூர் மஜக நிர்வாகிகள் பிரத்யேகமாக வரவேற்று உபசரிப்பதில் அக்கறை காட்டினர்.
மேலும் மதியம் 2.30 முதல் மாலை 4.30. மணி வரை அவர்கள் தலைவருடன் படம் எடுப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
அவரும் தொடர்ந்து உணவருந்தாமல் அவர்களின் உற்சாகத்திற்கு ஈடுகொடுத்தவாறு இருந்தார்.
இளைஞர் அணி சார்பில் காலையில் தலைவர் அவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூரம் வாகன அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது …
‘படை வருது…
படை வருது…
சமூக நீதி
படை வருது….
சொந்தங்கள்
நாங்கள்….
சொந்தங்கள்
நாங்கள்..
மஜக-வின்
சொந்தங்கள்
நாங்கள்….
தம்பிகள் நாங்கள்
தம்பிகள் நாங்கள்
தமிமுன் அன்சாரியின்
தம்பிகள் நாங்கள்
என்ற முழக்கம் அதிர்ந்தது.
மஜக பொதுக் குழுவில் இளைஞர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததை பற்றி தனது பொதுக் குழு உரையில் குறிப்பிட்ட தலைவர் அவர்கள், ‘நமது எதிர்கால நிர்வாகிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே இங்குள்ளனர். மீதி உள்ளவர்கள் எங்கே? என கேட்கலாம்.
அவர்கள் தற்போது பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் படித்துக் கொண்டுள்ளனர் என்றார்.
அப்போது அரங்கத்தின் சுவர்கள் தெறிக்கும் அளவுக்கு கைத்தட்டல் அதிர்ந்தது.
ஜுன் 1 முதல் மஜக இளைஞர் அணி சார்பில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் புதிய இளைஞர்களை சேர்க்க விருக்கும் 6 மாத செயல்திட்டம் பற்றியும் அந்த உரையில் அவர் விளக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆம்…
மஜக துடிப்புமிக்க இளைய தலைமுறையினர் கட்சி என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.
தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
28.02.2024.