திருப்பூர்.ஜூன்.07., நேற்று இரவு 8 மணியளவில் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்.1
மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
அணி நிர்வாகிகளை
தேர்வு செய்து பரிந்துரை செய்த
மாநில துணைச் செயலாளர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுக்கும், பரிந்துரையை ஏற்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளாக நியமணம் செய்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்.2
இந்த புனிதமிகு ரமலானில்
பல்லாண்டுகள் சிறையில் வாடும்
சிறைவாசிகள் விடுதலைக்காக
பிரார்த்தனை செய்ய வலியுறுத்தி
சுவரொட்டி பிரச்சாரம் செய்வதெனவும்.
தீர்மானம்.3
திருப்பூர் குருவாயூரப்பன் நகர்
பள்ளிவாசல் பிரச்சனையில் தலையிட்டு சுமுகமாக நிலையை எட்ட பொதுச்செயலாளர் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் படி அந்த பள்ளி நிர்வாகத்தை 07.06.17 அன்று சந்திக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் .4
திருப்பூரில் தொடர்ந்து குறிப்பிட்ட அமைப்புகள் கட்சிகளை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படும் கூட்டமைப்பை கண்டித்தும், இப்படியாக தொடர்ந்து புறக்கணிப்பட்டவர்கள் ஓரணியில் இணைந்து அனைத்து இஸ்லாமிய இயக்களின் கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அக்பர் அலி, அப்பாஸ், ஈஸ்வரன், வெங்கமேடு மீரான் மற்றும் அணி நிர்வாகிகள்
காஜாமைதீன், அபுதாஹீர், நெளபில் ரிஜ்வான், சஹாபுதீன் ஆகியோருடன், மஜகவின் தகவல் தொழிநுட்ப அணி மாநில துணை செயலாளர் எம்.காதர் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
திருப்பூர் மாநகர் மாவட்டம்.
#MJK_IT_WING
06.06.2017