கோவை.ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ அணிசெயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர், சபீர், அன்சர் மற்றும் அனைத்து பகுதி கிளை மருத்துவ அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு. ஆகஸ்ட்-15 அன்று நடைபெறும் மருத்துவமுகாம் மற்றும் இரத்ததான முகாமை அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்துவது எனவும், மருத்துவ முகாம் நடைபெறும் வளாகத்தில் தேசியகொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 06.08.17
Author: admin
நாகை தெற்கு இரட்டை மதகடி மஜக ஆலோசனை கூட்டம்..!
நாகை.ஆக.07., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், கீவளுர் ஒன்றியம், இரட்டை மதகடியில் நேற்று (06/08/2017) மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரியாஸுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாலர் பரகத் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதில் இரட்டை மதகடி சகோதரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது. பிறகு புதிதாக வந்திருந்த சகோதரர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். புதிய பொறுப்புக்குழு போடப்பட்டது. அதன் விபரம் வருமாறு. கிளை பொறுப்பாளர்களாக N.S.தாவூது அவர்களையும், H.M.சாகுல் ஹமீது அவர்களையும் நியமிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இனி வரும் காலங்களில் தீவிரமாக கிளை உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் ஒரு மாதத்திற்க்குள் கிளை பொதுக்குழு கூட்டம் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING நாகை தெற்கு மாவட்டம் 06.08.17
விவசாயிகள் வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் மஜக பொதுச் செயலாளர்…!
திருவாரூர்.ஆக.07., காவேரி டெல்டா மாவட்டங்களை கபளீகரம் செய்யும் நோக்கோடு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தொடர்ந்து, தற்போது "பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலத்தை" டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இதில் நாகை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 46 கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்தும், விவசாய நிலங்களை பாதுகாக்கும் பொருட்டும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R. பாண்டியன் தலைமையில் இன்று தொடர் வாகன பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இப்பிரச்சாரத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை இப்பிரச்சாரப் பயணம் டெல்டா மாவட்டங்களில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், நாகை தெற்கு மாவட்ட பொருளாலர் வடகரை பரக்கத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர்கனி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 07.08.17
இராமநாதபுரம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் கலந்துரையாடல்…!
இராமநாதபுரம்.ஆக.06., இன்று இராமநாதபுரம் ஐக்கிய ஜமாத் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எமனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பரமக்குடி வட்டார ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். இதில் மஜக பொருளாளர் S.S.ஹாரூன் ரசீது, இணை பொதுச் செயலாளர் K.M.மைதீன் உலவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நிறைவாக பேசிய மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள். "பண்மை சமூக அமைப்பில் சிறுபான்மையினர் எவ்வாறு பிரச்சனைகளை எதிர்கொள்வது" என்று விரிவாகவும், ஆழமாகவும் பேசினார். பிறகு ஜமாத்தார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்வை இராமநாதபுரம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஜனாப்.ஆலம் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மஜக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இலியாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர், நகர செயலாளர் நகர ஹபீப் ரஹ்மான் ஆகியோருடன் மஜக நிர்வாகிகள் உட்பட திரளான ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING இராமநாதபுரம் மாவட்டம். 06.08.2017
தஞ்சை வடக்கு நாச்சியார்கோயில் மஜக புதிய கிளை உதயம்!
தஞ்சை.ஆக.05., தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் நேற்று வெள்ளி மாலை 4.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் தலைமையில் புதிய கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயளாலர் ராசுதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃருப் அவர்களும் முன்னிலை வகிக்க, தமாம் மண்டல பொருளாளர் ஹாஜ் முஹம்மது மற்றும் சவூதி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் உஸ்மான் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் திருநறையூர் மற்றும் நாச்சியார்கோயில் கிளை நிர்வாகிகளை ஒருமனதான தேர்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மஜகவின் மாவட்ட , அணி , ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தகவல்; மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம். 04.08.2017