(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) கர்நாடகாவில் மனித உரிமைகளுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் பாடுபட்டு வந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது கர்நாடகாவில் 2013 முதல் பிரபல படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்கள் என இதுவரை மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது . மதச்சார்பின்மை , மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் குறி வைத்து கொல்லப்படுவதை நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான வகுப்புவாதிகளின் தாக்குதலாகவே இச்சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது. இலக்கியவாதி , பத்திரிக்கையாளர், சமூக செயல்பாட்டாளர் என பன்முகத்தன்மையோடு இயங்கிய போராளி கௌரி லங்கேஷ் மரணம் நாட்டின் சகிப்புத்தன்மைக்கு விடப்பட்ட சவாலாகும். அவரை இழந்துவாடும் அனைவரின் துயரத்திலும் மஜக பங்கேற்கிறது . அவரின் பணிகளை முன்னெடுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06.09.17
Author: admin
பண்ரூட்டியில் மஜக சார்பில் நீட் தேர்வை நீக்க கோரியும், அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்..
கடலூர்.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ரூட்டி நகரில் நீட் தேர்வை விலக்க கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில், நகர செயலாளர் யாசின் முன்னிலையிலும், மாவட்ட துணைச் செயலாளர் அஜீஸ் கான் வரவேற்புரை நிகழ்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நெய்வேலி ஷாஜஹான் அவர்களும், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கண்டன கோஷங்களை மாணவர் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ரியாஸ் தொடங்கி வைத்தார், மாவட்ட துணைச் செயலாளர் யூசுப், ஒன்றிய செயலாளர் ரஹிம் கான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கண்டனங்களை பதிவு செய்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம். 05.09.2017.
திருப்பூரில் இரயில் மறியல் மாணவர் இந்தியா அமைப்பினர் கைது..!
திருப்பூர்.செப்.05., மாணவர் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்டம் சார்பில் மருத்துவக் கல்லூரியில் சேர முழு தகுதியான மதிப்பெண்கள் இருந்தும், நீட் தேர்வு எனும் சதியால் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இறுதியில் உயிரிழந்த அரியலூர் மாவட்ட சகோதரி அனிதா அவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை இரத்து செய்யகோரியும், சமூக நீதி மண்ணாக விளங்கும் தமிழகத்தில், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை அழிக்க முயற்சிக்கும், மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், இன்று காலை 11.30 மணியளவில் அளவில் இரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பி.நெளஃபல் ரிஸ்வான் அவர்கள் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் கே.மதன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த உணர்வுமிக்க போரட்டத்திற்கு ஆதரவாக மஜக மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நேரம் 11.30 ஆனதும் குறித்த நேரத்தில் காதர்பேட்டை மார்கெட் பகுதியில் இருந்து திரண்ட மாணவ பட்டாளங்கள், இரயில் நிலையைத்தை நோக்கி முன்னேறினர். தடுப்புகள் அமைத்து தடுத்த போலிசார்களின் தடைகளை உடைத்து இரயில் நிலையம் புகுந்தனர். அதிகாரம் பலங்கொண்டு காவல்துறை அதிகாரிகள் மறிக்கவே, உணச்சிவசப்பட்ட மாணவர்கள் பிரதமர் மோடியின் உருவத்தை எரித்தும் கிழித்தும் எரிந்தனர். காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர். இந்த மறியல் போராட்டத்தில் மாநில உரிமையை பறிக்கும்
தமிழக மீனவர்கள் விடுதலை!
நாகை.செப்.04., இலங்கை கடற்படையால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 80 மீனவர்கள் நேற்று (03.09.17) விடுதலை செய்யப்பட்டார்கள். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (04.09.17) இந்திய கடலோர கடற்படை கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 04.09.17
தூத்துக்குடி (தெ) மாவட்டம் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக கிரிக்கெட் போட்டி..!
தூத்துக்குடி.செப்.04., கடந்த 20-08-2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்று போட்டியை துவக்கி வைத்து இளைஞர்களுக்கு சிறப்பான உற்சாகத்தை அளித்தார். அதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இறுதி போட்டியை மஜக மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து இறுதி போட்டியில் கலந்து கொண்ட இரண்டு அணிகளையும் உற்ச்சாகப்படுத்தினார். பின்பு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஆத்தூர் நகர செயலாளர் M.P.முருகானந்தம், மஜக மாவட்ட துணை செயலாளர் A.முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆத்தூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆத்தூர் கிளை செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் நிர்வாகிகள் ஹாஜா, இப்ராஹிம், அரஃபாத், அஃப்சர், அல்தாஃப், ஹாரிஸ், நவாஸ், ரியாஸ், ராஜா முகம்மது ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம். 03-09-2017