பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை மஜக கடும் கண்டனம்…

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை)

கர்நாடகாவில் மனித உரிமைகளுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் பாடுபட்டு வந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது

கர்நாடகாவில் 2013 முதல் பிரபல படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்கள் என இதுவரை மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது .

மதச்சார்பின்மை , மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் குறி வைத்து கொல்லப்படுவதை நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான வகுப்புவாதிகளின் தாக்குதலாகவே இச்சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது.

இலக்கியவாதி , பத்திரிக்கையாளர், சமூக செயல்பாட்டாளர் என பன்முகத்தன்மையோடு இயங்கிய போராளி கௌரி லங்கேஷ் மரணம் நாட்டின் சகிப்புத்தன்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.

அவரை இழந்துவாடும் அனைவரின் துயரத்திலும் மஜக பங்கேற்கிறது . அவரின் பணிகளை முன்னெடுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் .

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.09.17