மாணவர் இந்தியா சார்பில் நேற்று 9.8.2016 சென்னையில் ” #மாட்டுக்கறியும்_பாஸிஸ_அரசியலும்’ என்ற கருத்தரங்கம் சூடான விவாதங்களுடன் நடைபெற்றது.
நோக்கவுரையாற்றிய மஜக மாநில செயலாளர் N. #தைமிய்யா அவர்கள்.”பாஜக வின் மாட்டுக்கறி அரசியலின் பின்னணிகளையும், நாட்டை காவிமயமாக்க அவர்கள் எடுத்து வரும் அரசியலையும், விலாசித் தள்ளினார்.
மஜக பொருளாளர் #ஹாருன்_ரஷிது பேசும் போது ‘ முன்பு பசுவதைக் குறித்து பேசியதால், டெல்லியில் காமராஜர் அவர்களை உயிரோடு கொளுத்த முயன்ற இந்துத்துவ அரசியலை’ எடுத்துக்கூறி அவர்களது சதிகளை தோலுரித்தார்.
அடுத்துப்பேசிய மந்தைவெளி இமாம் #இல்யாஸ்_ரியாஜி அவர்கள் வேதகாலம் தொடங்கி இப்போது வரை தொடரும் மாட்டுக்கறி அரசியலை விலாவாரியாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
மேல் 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். #திருமுருகன் அவர்கள், ” உணவு அரசியலின் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியலையும், இந்துத்துவத்தின் பிரித்தாலும் கொள்கைகளையும்” புள்ளிவிபரங்களோடு அம்பலபடுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் #ரஜினிகாந்த் பேசும் போது’ ஒபாமா முதல் எல்லோரும் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். மாட்டுக்கறியை கெளதம புத்தரும் சாப்பிட்டிருக்கிறார். வேதகாலம் தொடங்கி பிராமணர்கள் சாப்பிட்டுள்ளனர். என்று பேசி ஆவேசமாக பாஜக வின் வகுப்புவாத அரசியலை சாடினார்.
நிறைவுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் M. #தமிமுன்_அன்சாரி அவர்கள் மாணவர் இந்தியாவை சிலாகித்தார். அறிவு சார்ந்த ஆளுமைகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும், மக்களை சிந்திக்க வைப்பதே அதன் திட்டம் என்றும் பேசினார். மேலும் அவர் பேசியதாவது.
மாட்டுக்கறியே சாப்பிடுவதில்லை என்று யாரும் கூற முடியாது. காரணம் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற பானங்களிலும் மாட்டுக்கறி எலும்பு கலந்துள்ளது. மாத்திரை குப்பிகளில் மாட்டு எலும்பு கலந்துள்ளது. 400 ரூபாய்க்கு ஆட்டிறைச்சி வாங்க முடியாதவர்கள், புரோட்டின் நிறைந்த மாட்டுக்கறியை மலிவு விலையில் வாங்குகிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சியில்தான் மாட்டுக்கறி ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது. அவர்கள் ஆட்சி செய்யும் மஹாராட்டிராவின் மும்பை துறைமுகத்திலிருந்து தான் கண்டெய்னர், கண்டெய்னராக மாட்டுக்கறி ஏற்றுமதியாகிறது. அவர்கள் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் தான் உணவின்றி 500 பசுக்கள் இறந்துள்ளது. அதற்காக ராஜஸ்தான் முதல்வரை கட்டி வைத்து அடிப்பீர்களா?
ரிக் வேதத்திலும், அதர்வன வேதத்திலும் மாட்டுக்கறியை புகழ்ந்து பாடல்கள் உள்ளன. ராமாயாணத்திலும், மஹாபாரத்திலும் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. அஸ்வமேத யாகத்தில் பசுக்கள் பலியிடப்பட்டுள்ளன். பெளத்த மதம் புலால் உண்ணாமையை வலியுறுத்தியதால், அதை நோக்கி மக்கள் சென்றனர். அதன் பிறகே மாட்டுக்கறியை பிராமணர்கள் கைவிட்டு, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட பசுவை புனிதமாக அறிவித்தனர். கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில்தான் பசு கொல்லப்படுவது தடுக்கப்பட்ட ஆதாரம் உள்ளது.
இன்று பாஜக உத்தரப்பிரதேச அரசியலுக்காக வேடம் போடுகிறது. தனது அரசியல் தோல்விகளிலிருந்து நாட்டு மக்களை திசைதிருப்ப பசு அரசியலை கையிலெடுத்திருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் இதற்கு இடமில்லை. பெரியார், அண்ணா, காமராஜர், தேவர், காயிதே மில்லத், தோழர் ஜீவா போன்றவர்களின் மண் இது. தமிழ் தேசியத்தை கொண்டும், திராவிடத்தை கொண்டும், கம்னியூஸத்தை கொண்டும் இதற்கு எதிராக எழுந்து நிற்போம்.
மாட்டுக்கறியை சாப்பிடுவோம் மகிழ்ச்சியாக வாழ்வோம்! இவ்வாறு மஜக பொதுச்செயலாளர்
M.#தமிமுன்_அன்சாரி பேசினார்.
இறுதியாக எல்லோருக்கும் மாட்டுக்கறியும், இடியாப்பமும் இரவு உணவாக வழங்கப்பட்டது. பல்வேறு சமுதாய மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் உற்சாகமாக நிகழ்ச்சியை ரசித்தனர்.
மாணவர் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், அப்சர், பஷிர் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு