
ஆக.12., இன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி சார்பில் இன்று சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாஹிப் தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் #மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி மரக்கன்றை நட்டு மாணவ_மாணவிகளிடம் உரையாற்றினார்.
தொடர்ந்து மரக்கன்றுகளை மஜக பொருளாளர் #ஹாரூன்_ரஷீது,மாநில செயலாளர் சாதிக் பாஷா,இளைஞரணி மாநிலச் செயலாளர் ஷமீம் ஆகியோர் நட்டனர்.
பிறகு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்னிறுத்தி சைக்கிள் ஊர்வலம் நடைப் பெற்றது.போக்குவரத்து நெரிசல் மற்றும் காலை நேர வாகன நெருக்கடி காரணமாக காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுடன் காவல்துறை அனுமதி அளித்தது.
பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது கொடியசைத்து சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் M.தமிமும் அன்சாரி தலைமையில் சுற்றுச்சூழல் பதாகைகளுடன் சைக்கிள் ஊர்வலம் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் வரை நடைபெற்றது.
தகவல்;
மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)