சட்டசபை நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க வேண்டும் என  பலருக்கும் ஆசை உண்டு.அதைப் பார்க்க வேண்டுமெனில் யாராவது MLA அல்லது அரசியல் தலைவர்கள் தொடர்பு இருந்தால் மட்டும்தான் சாத்தியம் என்ற நிலை உள்ளது.

இதை தகர்க்கும் வகையில் எனது தொகுதியை சார்ந்த சாமான்யர்களுக்கும்  அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறேன். மஜக சகோதர_சகோதரிகளுக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறேன்.

நேற்று  நான் படித்த சென்னை புதுக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் பேராசிரியர்களும், மாணவர்களும் சபை நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

தமிழகம் முழுக்க மஜக சகோரரர்களின் அறிமுகத்தோடு அல்லது கடிதத்தோடு வருகைத் தரும் அனைவருக்கும் அந்த வாய்ப்புகளை வழங்கி வருகிறேன்

காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை உறுப்பினர்களின் செயல்பாடுகளை வாய்ப்புகளற்ற சாமான்யர்களும் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் தான்!

(விருப்பம் உள்ளவர்கள் காலை 11 மணிமுதல் 1 மணி வரை #மஜக தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்.)

தொடர்பு எண்:044 43514550

இவண்:
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி