திருப்பூரில் இரயில் மறியல் மாணவர் இந்தியா அமைப்பினர் கைது..!

image

image

image

திருப்பூர்.செப்.05., மாணவர் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்டம் சார்பில் மருத்துவக் கல்லூரியில் சேர முழு தகுதியான மதிப்பெண்கள் இருந்தும்,

நீட் தேர்வு எனும் சதியால் வாய்ப்பு மறுக்கப்பட்டு,  இறுதியில் உயிரிழந்த அரியலூர் மாவட்ட சகோதரி அனிதா அவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை இரத்து செய்யகோரியும்,

சமூக நீதி மண்ணாக விளங்கும்
தமிழகத்தில், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை அழிக்க முயற்சிக்கும், மோடி தலைமையிலான
மத்திய அரசை கண்டித்தும்,

இன்று காலை 11.30 மணியளவில் அளவில் இரயில் மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பி.நெளஃபல் ரிஸ்வான் அவர்கள் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் கே.மதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த உணர்வுமிக்க போரட்டத்திற்கு ஆதரவாக மஜக மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நேரம் 11.30 ஆனதும் குறித்த நேரத்தில் காதர்பேட்டை மார்கெட் பகுதியில் இருந்து திரண்ட மாணவ பட்டாளங்கள், இரயில் நிலையைத்தை நோக்கி முன்னேறினர்.

தடுப்புகள் அமைத்து தடுத்த போலிசார்களின் தடைகளை உடைத்து இரயில் நிலையம் புகுந்தனர். அதிகாரம் பலங்கொண்டு காவல்துறை அதிகாரிகள் மறிக்கவே,

உணச்சிவசப்பட்ட மாணவர்கள்
பிரதமர் மோடியின் உருவத்தை எரித்தும் கிழித்தும் எரிந்தனர். காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர்.

இந்த மறியல் போராட்டத்தில்
மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராகவும்,
மாநில உரிமையை விட்டுக்கொடுக்க துணியும்
மாநில அரசிற்கு எதிராகவும்
விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.

நிலைமை கை மீறி போவதை அறிந்த போலிசார் அனைவரையும் கைது செய்தனர்.

தகவல்
#மாணவர்_இந்தியா
#ஊடகபிரிவு
#திருப்பூர்_மாவட்டம்
05_09_2017