சென்னை. டிச.06., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக தாம்பரத்தில் டிசம்பர்-6 போராட்டம் மிகுந்த எழிச்சியுடன் நடைபெற்றது. தாம்பரம் வீதிகள் எங்கும் மஜக கொடிகளும் பேனர்களும் நகரையே பரபரப்பாக்கியது.
ஷண்முகம் சாலை திறும்பும் இடமெல்லாம் ஊர்மக்கள் திரண்டிறுந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரனி MLA அவர்கள் பாஜவின் மதவாதத்தை தோலுரித்து விளக்கமாக பேசினார்.
நிறைவுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில் இந்துக்களை உயர்வாக எழுதியிருப்பதையும், அயோத்தியில் உள்ள கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியது குறித்தும், பாபர் மீது போடபட்ட பழிகள் பின்னனி குறித்தும் விரிவாக பேசினார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி முடிந்தபிறகு திரு.பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் வருகை தந்தார்.
அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த மக்களிடம் அவர் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினார்.
அப்போது பாபர் மசூதி இடிப்பு
ஒரு அழியாத களங்கம் மீண்டும் அங்கே மசூதியை கட்டிகொடுப்பதுதான் தர்மம்,
பாபர் மசூதி இடிக்கபட்ட பிறகு திருவணந்தபுரத்தில் முஸ்லிம்கள் ஒரு கண்டன மாநாடு நடத்தினார்கள் அதில் நான் பங்கேற்றி உறையாற்றி, பாபர் மசூதியை கட்ட அப்போது, என் சார்பாக 5 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன்.
பாபர் கோயிலை இடித்தார் என்பது ஒரு பெரும் பொய். பாபர் காலத்தில் அயோத்தியில் வாழ்ந்த ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்த துளசிதாசன், அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எங்கும் எழுதவில்லை என்று சுருக்கமாக பேசினார்.
தாம்பரத்தை திணரவைத்த இந்நிகழ்வில் மாநில செயலாளர் NA.தைமியா, சீனி முஹம்மது, மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞர் அணி துனை செயலாளர்கள் N.அன்வர் பாஷா, தாரிக், மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜிந்தாமதர், பொருளாளர் முஹம்மது யாக்கூப், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரஹமத்துல்லாஹ், பொருளாளர் மீராசா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் என 1,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
#மஜக_காஞ்சி_மாவட்டம்
06.12.17