#தடையை_உடைத்த_மஜக.!
#பெரும்_எழுச்சியோடு_மக்கள்_திரண்டனர்…!!
#திணறிய_கோவை_ரயில்_நிலையம்..!!!
கோவை.டிச.06. கோவையில் டிசம்பர்6 அன்று மஜக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை பெரும் பரபரப்பாக மாறியது. காலையிலேயே கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் மஜகவினர் முழக்கங்கள் எழுப்பியபடியே மோட்டார் பைக்குகளில் இரயில் நிலையம் நோக்கி அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தனர். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை.
மஜக சார்பில் மாநகர் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத படவில்லை, பேனர்கள் வைக்கப்படவில்லை காரணம் தடையை மீறிய போராட்டம் என்பதால் காவல் துறை இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை, வெறும் துண்டு பிரசுரங்களும், போஸ்டர்களிலும் மக்களை உசுப்பினர்.
சொந்த சிலவில் தன்னெழுச்சியாக மஜகவினர் வாகனங்களை எடுத்து கொண்டு, பெரும் எழுச்சியோடு இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமை வகித்தார்.
இதில் தலைமையகத்தின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இது தவிர மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட துணைசெயலாளர் ABT.பாருக் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தடையை மீறிய போராட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட மஜகவினர் பெரும் எழுச்சியோடு பங்கேற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜக தொண்டர்கள் ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறியபோது காவல்துறை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இப்போராட்டத்தை மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணைசெயலாளர்கள் அக்பர், சபீர், அன்சர், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ABS.அப்பாஸ், மருத்துவஅணி மாவட்ட செயலாளர் அபு, துணைசெயலாளர் செய்யது இப்ராஹீம், சுற்றுச்சூழல் அணி மாவட்டசெயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது இப்ராஹீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இப்போராட்டத்தில் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, பாசித், முஸ்தபா உமர், பகுதி நிர்வாகிகள் ஜமால், காஜா உசேன், சமீர், பூ.காஜா, மற்றும் துணை நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என தடையை மீறிய போராட்டத்தால் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக போராட்டத்தில் 350 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
06/12/2017.